- Home
- Gallery
- ஆனந்த் அம்பானியை விட... வயதில் மூத்தவரா ராதிகா மெர்ச்சண்ட்? எத்தனை வயசு வித்தியாசம் தெரியுமா?
ஆனந்த் அம்பானியை விட... வயதில் மூத்தவரா ராதிகா மெர்ச்சண்ட்? எத்தனை வயசு வித்தியாசம் தெரியுமா?
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் விரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், அனந்த் அம்பானி - ராதிகா மற்றும் வயது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அம்பானியின் குடும்பமே விரைவில் நடைபெற உள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமண வைபோகத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணம் நிச்சயதார்த்தம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள ஷ்ரிநாத் கோவிலில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஆனந்த் - ராதிகாவின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை கடந்த ஜனவரி மாதம், அம்பானி குடும்பம் மிகப் பிரமாண்டமாக நடத்தினர். ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கு மட்டுமே சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டது.
ஜாம் நகரில் 3 நாட்களுக்கு மேல் நடந்த இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சல்மான் கான், அமீர்கான் உள்ளிட்ட பாலிவுட் திரையுலகமே திரண்டு வந்து கலந்து கொண்டது. அதே போல் உலக அளவில் பிரபலமான தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதை தொடர்ந்து அண்மையில் தெற்கு பிரான்ஸ் கடற்கரையில் ஒரு குரூஸ் கப்பலில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் ஏராளமான பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
வாயை விட்டு சிக்கிய ரோகிணி..! க்ரிஷுக்கு தெரியவந்த உண்மை... மீனா - முத்துவிடம் இதை சொல்வாரா?
கூடிய விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற உள்ள நிலையில், தற்போது ராதிகா மற்றும் ஆனந்த் அம்பானியின் வயது குறித்து யாருக்கும் தெரியாத தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. குறிப்பாக ராதிகா, ஆனந்த் அம்பானியை விட வயதில் மூத்த வர் என்பதுதான் பலருக்கும் அதிர்ச்சியான தகவல்.
ராதிகா மெர்ச்சண்ட் டிசம்பர் 18, 1994 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனந்த் அம்பானி ஏப்ரல் 10, 1995 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ராதிகா ஆனந்தை விட ஒரு வயது மூத்தவர் என்பது தெரிகிறது.
பல வருடங்களாக ராதிகா மற்றும் ஆனந்த் அம்பானி இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்கும் நிலையில், பின்னர் காதலிக்கவும் துவங்கினர். பல வருட காதலும், காத்திருப்பும் தான் தற்போது இவர்களின் திருமணத்திற்கு பாலமாக அமைந்துள்ளது.
பல ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியான அம்பானியின் சம்மந்தியின் விரேன் மெர்சண்டின் நிகர மதிப்பு ரூபாய் 755 கோடி என கூறப்படுகிறது. அதே போல் ராதிகாவின் நிகர மதிப்பு வெறும் 10 கோடி என்று கூறப்படுகிறது.
சொகுசு கப்பலை தொடர்ந்து.. இத்தாலிய நகரில் தொடரும் அனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள்..