- Home
- Gallery
- வாயை விட்டு சிக்கிய ரோகிணி..! க்ரிஷுக்கு தெரியவந்த உண்மை... மீனா - முத்துவிடம் இதை சொல்வாரா?
வாயை விட்டு சிக்கிய ரோகிணி..! க்ரிஷுக்கு தெரியவந்த உண்மை... மீனா - முத்துவிடம் இதை சொல்வாரா?
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ரோகிணி பொத்தி பொத்தி வைத்திருந்த ரகசியம் தற்போது கிரிஷுக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்த ப்ரோமோ வெளியாகி சீரியல் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

கடந்த ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக துவங்கிய சீரியல் 'சிறகடிக்க ஆசை'. வழக்கமான குடும்ப கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும்... இந்த சீரியலை கொண்டு செல்லும் விதம் மிகப்பெரிய பிளஸ் என கூறலாம்.
சுந்தர் ராஜன், அனிலா ஸ்ரீகுமார், வெற்றி வசந்த், கோமதி பிரியா, சல்மா அருண், ஸ்ரீ தேவா, உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்கள். "அண்ணாமலையில் ரயிலில் அடிபட்டு இருப்பவரின் பெண்ணை தன்னுடைய மூத்த மகன் மனோஜுக்கு திருமணம் செய்து வைக்க, அண்ணாமலை முடிவு செய்ய... அதற்க்கு வரதச்சனையாக, அண்ணாமலையின் 27 லட்சம் ரிட்டயர்மெண்ட் பணத்தை வாங்கி கொண்டு சம்பாதிக்கிறார். ஆனால் அந்த பணத்தை ஜீவா என்பவரிடம் கொடுத்து ஏமார்ந்து நிலையில், ரோகிணி என்பவரை காதலித்து திருமணம் செய்கிறார்".
ரோகிணி ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தைக்கு தாயானவர். ஏழை குடும்பத்து பெண் என்பதை மறைத்து மனோஜை திருமணம் செய்ய, இந்த ரகசியம் எப்போது வெளியே வரும்... என எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள். அதே போல் முத்து சீர் திருத்த பள்ளிக்கு செல்ல காரணம் என்ன, மனோஜுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்.விஜயா இந்த அளவுக்கு பெற்ற பிள்ளையை வெறுக்க காரணம் என என்பதையும் தெரிந்து கொள்ள பலர் ஆர்வமாக உள்ளனர்.
ரோகிணி தான் க்ரிஷின் அம்மா என்பதை மறைத்து, அதை என கூறி அம்மாவின் துணையோடு வளர்த்து வந்த நிலையில், தற்போது இந்த ரகசியம் கிரிஷுக்கு தெரியவந்துள்ளது.
மற்ற பிள்ளைகளுடன் விளையாடி கொண்டிருக்கும் போது கிரிஷுக்கு விபத்து ஏற்பட்டு கண்ணில் அடிப்படை அதற்காக, ரோகிணியின் அம்மா மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது, முத்து - மீனாவை பார்க்க நேர்கிறது. ஆதரவு இல்லாமல் தவிக்கும் ரோகிணியின் அம்மா மற்றும் மகனை முத்து - மீனா இருவரும் தங்களின் வீட்டுக்கே அழைத்து வருகிறார்கள்.
இது ரோகிணிக்கே கொஞ்சம் ஷாக்காக இருந்தாலும்... கிரிஷுக்காக தன்னுடைய அறையை விட்டு கொடுக்கிறார். மேலும் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், ஏன் க்ரிஷை அழைத்து கொண்டு வந்தாய் என கெடுக்கும் போது, அவரின் அம்மா ஆதங்கத்தோடு பேசி உனக்கு கவலையே இல்லையா என கேட்கிறார். எப்படி கவலை இல்லாமல் இருக்கும் நான் அவனை பெத்த அம்மா என சொல்லும் போது, இதனை க்ரிஷ் கேட்க நேரிடுகிறது. அத்தை நீ தான் என்னோட அம்மாவா என கேட்க ரோகிணியும் ஆமாம் என கூறுகிறார்.
ஒருவழியாக க்ரிஷுக்கு இந்த ரகசியம் தெரிய வந்ததை தொடர்ந்து, க்ரிஷ் ரோகிணி தான் தன்னுடைய அம்மா என முத்து - மீனாவிடம் கூறினால் பார்லர் அம்மாவின் கதி அதோகதி தான். ஏற்கனவே பெத்த பிள்ளையை விட்டு அப்படி என்ன சம்பாதிக்கணும் என செம்ம கடுப்பில் இருக்கும் முத்துவுக்கு, ரோகிணி தான் க்ரிஷின் அம்மா என தெரியவந்தால்... சொல்லவா வேண்டும் !!