- Home
- Gallery
- Rajinikanth: இமயமலையில் உள்ள பாபா குகையில் தியானம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!
Rajinikanth: இமயமலையில் உள்ள பாபா குகையில் தியானம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இமயமலைக்கு சென்றுள்ள நிலையில்... அங்கு பாபா குகையின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

80-பது மற்றும் 90-களில் முன்னணி ஹீரோவாக இருந்த பிரபு, சரத்குமார், அர்ஜுன், சத்யராஜ் போன்ற பலர் தங்களின் வயசுக்கு ஏற்ற போல், அப்பா, மாமா, வில்லன் என நடிக்க துவங்கி விட்ட நிலையில், அன்று முதல் இன்று வரை தன்னுடைய 73 வயதிலும் ஹீரோவாக நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.
தலைவர் அரசியல் குறித்து பல வருடங்கள் பேசி வந்த போது... எப்படியும் அரசியலில் கால் பதித்த பின்னர் திரையுலகிற்கு டாட்டா சொல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னுடைய உடல் நிலை காரணமாக, அரசியல் அறவே வேண்டாம் என கூறி ஷாக் கொடுத்தார். எனினும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
வாயை விட்டு சிக்கிய ரோகிணி..! க்ரிஷுக்கு தெரியவந்த உண்மை... மீனா - முத்துவிடம் இதை சொல்வாரா?
150 கோடிக்கு மேல் சம்பளம் பெரும் ஹீரோவாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில், 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஷூட்டிங் முடிந்த கையேடு இமயமலை, கேதார்நாத் மற்றும் பக்ரிநாத் போன்ற இடங்களுக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கிருந்து வந்த கையேடு கூலி படத்தில் இணைய உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, ரஜினிகாந்த் இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்தின் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதன்படி, ரஜினிகாந்த் இமயமலையில் பாபா குகைக்கு சென்று தியானம் செய்துள்ளார். அங்கு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் படு வைரலாகி வருகின்றன.