- Home
- Gallery
- Adah Sharma: சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த... வீட்டில் குடியேறிய பிரபல தமிழ் பட நடிகை!
Adah Sharma: சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த... வீட்டில் குடியேறிய பிரபல தமிழ் பட நடிகை!
நடிகை அதா சர்மா, மறைந்த நடிகர் சுஷாந்தின் அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு குடியேறிய தகவலை தற்போது உறுதி செய்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்ட நடிகராக மாறினார். மிக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கடந்த சுஷாந்த், கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை பாந்த்ராவில் உள்ள தன்னுடைய அப்பார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் போலீஸ் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையிலும், பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மேலும் சுஷாத் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என்றும், இது திட்டமிட்ட கொலை என அவரது குடும்பத்தினர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரியா சக்கரவர்த்தி மீது போலீஸ் புகார் அளிக்க, அது சிபிஐ வரை சென்றது. பின்னர் பல்வேறு பரிமாணங்களில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு போதைப்பொருள் வழக்காக மாறி, இதன் மூலம் பலர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் அம்பானியை விட... வயதில் மூத்தவரா ராதிகா மெர்ச்சண்ட்? எத்தனை வயசு வித்தியாசம் தெரியுமா?
சுஷாந்த் சிங் உயிரிழந்து நான்கு வருடங்கள் ஆன பின்னரும், தற்போது வரை அவருடைய மரணம் குறித்தான மர்மம் விலகவில்லை. அதே போல் சுஷாந்த் சிங் மறைவுக்கு பின்னர் அவர் மும்பை பாந்த்ராவில் வசித்து வந்த அப்பார்ட்மெண்ட் யாருக்கும் வாடகைக்கு விடப்படாமல் இருந்த நிலையில், அண்மையில் பிரபல நடிகை அதா சர்மா... சுஷாந்த் சிங் வீட்டில் குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த தகவலை தற்போது பிரபல நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் அதா சர்மா உறுதி செய்துள்ளார்.
அதா சர்மா ஹிந்தியில் நடிக்க தொடங்கி இருந்தாலும், தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ், உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் இது நம்ம ஆளு படத்தில் ஸ்பெஷல் அப்பியரன்ஸில் தோன்றிய, இவர் சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது மட்டும் இன்றி வசூலிலும் சக்க போடு போட்டது.
Rajinikanth: இமயமலையில் உள்ள பாபா குகையில் தியானம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!
தன்னுடைய பணிகளில் மிகவும் பிஸியாக இருந்ததால், புதிய வீட்டில் குடியேறி தகவலையும் வெளியிட முடியவில்லை என கூறியுள்ள அதா ஷர்மா, பாலி மலையில் இருந்த தன்னுடைய முந்தைய வீடு குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
அதா சர்மா, தன்னுடைய பாட்டி மற்றும் அம்மாவுடன் இப்போது பாந்திராவில் குடியேறியுள்ள சுஷாந்தின் வீடு பாசிட்டிவான உணர்வை தருவதாகவும், எனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 3,600 சதுர அடிக்கு மேல் உள்ள இந்த வீட்டிற்கு 4.5 லட்சம் ஒரு மாதத்திற்கு வாடகையாக அதா ஷர்மா கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.