- Home
- Gallery
- Sivakarthikeyan: 3-ஆவது குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்து!
Sivakarthikeyan: 3-ஆவது குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்து!
அண்மையில் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு 3-ஆவது குழந்தை பிறக்க உள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து, தற்போது தனக்கு குழந்தை பிறந்த தகவலை சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்து, கோலிவுட் திரையுலகின் இளவரசராக மாறியவர் சிவகார்த்திகேயன். இவரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில், பல பிரச்சனைகள் வந்த போதிலும், தொடர்ந்து போராடி... முன்னணி இடத்திற்கு நகர்ந்தார்.
தளபதி விஜய், அஜித்துக்கு நிகரான இடத்தை பிடித்துள்ள சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக உள்ளார். நடிப்பை தாண்டி, தயாரிப்பிலும் பட்டையை கிளப்பும் சிவா.... தன்னுடைய சொந்த மாமா பொண்ணான ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டார்.
Sivakarthikeyan
2010-ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணம் நடந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் குழந்தையான மகள் ஆராதனாவை வரவேற்றனர். இவருக்கு தற்போது 11-வயது ஆகும் நிலையில், இவரை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு 2-வது ஆண் குழந்தையான குகன் தாஸ் கடந்த 2021-ஆம் ஆண்டு பிறந்தார்.
தன்னுடைய தந்தையை குழந்தையாக பிறந்துள்ளார் என சிவகார்த்திகேயன் மிகவும் சந்தோஷமாக கூறினார். மூன்றாவது முறையாக ஆர்த்தி கர்ப்பமாக இருந்த நிலையில்... அண்மையில் தான் இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
ஆனந்த் அம்பானியை விட... வயதில் மூத்தவரா ராதிகா மெர்ச்சண்ட்? எத்தனை வயசு வித்தியாசம் தெரியுமா?
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆர்த்திக்கு நேற்று இரவு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை சிவகார்த்திகேயன் தற்போது அதிகார பூர்வமாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது, அனைவருக்கும் வணக்கம் எங்களுக்கு நேற்று இரவு, ஜூன் 2 ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிக்கும், குகனுக்கும், நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம். நன்றி அன்புடன் சிவகார்த்திகேயன் என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.