வனிதா அக்காவா இது... வெளிநாட்டில் பார்ட்டிக்கு சென்ற 50 வயது பியூட்டி அனிதா விஜயகுமாரின் கார்ஜியஸ் போட்டோஸ்
நடிகை வனிதாவின் அக்கா அனிதா விஜயகுமார் வெளிநாட்டில் தோழிகளுடன் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
anitha vijayakumar
தமிழ் திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளா கடந்த 2013-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால் தற்போது தனது மூத்த மனைவியான முத்துக்கண்ணு உடன் வாழ்ந்து வருகிறார் விஜயகுமார்.
vijayakumar daughter anitha
விஜயகுமாருக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். இதில் கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் ஆகியோர் விஜயகுமாரின் மூத்த மனைவியான முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்களாவர். அதேபோல் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கு பிறந்த மகள்கள் ஆவர்.
vanitha sister anitha vijayakumar
விஜயகுமாரின் 5 மகள்களின் வனிதா, கவிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா ஆகிய நான்கு பேருமே சினிமாவில் நடித்துள்ளனர். அதேபோல் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்யும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜயகுமாரின் வாரிசுகளில் சினிமா பக்கம் தலைகாட்டாத ஒருவர் என்றால் அது அனிதா மட்டும் தான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
anitha vijayakumar in doha
டாக்டருக்கு படித்துள்ள அனிதா விஜய்குமாருக்கு தற்போது 50 வயது ஆகிறது. சினிமா மீது ஆர்வம் காட்டாத இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தோஹாவில் குடும்பத்தோடு வசித்து வரும் அனிதா, கடந்த மாதம் தான் சென்னைக்கு வந்து இங்கு பல கோடி மதிப்பில் கட்டிய வீட்டுக்கு பால் காய்ச்சினார்.
anitha vijayakumar party photos
சுமார் ஒரு மாதங்களுக்கு மேல் சென்னையில் இருந்த அனிதா, கடந்த வாரம் மீண்டும் தோஹாவுக்கு சென்றுவிட்டார். அங்கு வேலையில் பிசியாக இருந்த அனிதா, தற்போது தன்னுடைய வெளிநாட்டு தோழிகளுடன் சேர்ந்து பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அனிதா. அந்த புகைப்படங்களில் 50 வயது பியூட்டியாக ஜொலிக்கிறார் அனிதா.
இதையும் படியுங்கள்... என்னடா டிரெஸ் இது.. லோ ஹிப் கவர்ச்சியில் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்- வைரல் கிளிக்ஸ் இதோ