சினிமாவில் இருந்து விலகினாலும் கோடீஸ்வரியாக வாழும் ஷாலினி... அஜித் மனைவிக்கு இத்தனை கோடி சொத்துக்களா?
நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினியின் சொத்து மதிப்பு மற்றும் அவர் வாங்கிய சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
shalini
சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருபவர் ஷாலினி. இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பேபி ஷாலினியாக ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் பாசில் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு திரைக்கு வந்த அனியாதி பிராவு என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் அதே ஆண்டு தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி.
ajith wife shalini
முதல் படத்திலேயே ஹீரோயினாக வெற்றிகண்ட ஷாலினிக்கு அடுத்ததாக அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் தான் ஷாலினியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்படி அமர்களம் படத்தில் நடித்தபோது தான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இப்படத்தின் ஷூட்டிங்கின் போது மோதலில் ஆரம்பித்த இவர்களின் சந்திப்பு காதலில் முடிந்தது.
shalini Ajithkumar birthday
அமர்களம் படம் முடித்ததும் விஜய்க்கு ஜோடியாக கண்ணுக்குள் நிலவு மற்றும் மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான அலைபாயுதே ஆகியவற்றில் நடித்த ஷாலினி, அதே ஆண்டே அஜித்தை திருமணமும் செய்துகொண்டார். கடந்த 2000-ம் ஆண்டு அஜித் - ஷாலினி ஜோடிக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் பிரியாத வரம் வேண்டும் என்கிற படத்தில் மட்டும் நடித்தார். அத்துடன் சினிமாவை விட்டே விலகினார் ஷாலினி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ajith shalini kids
திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து அஜித் - ஷாலினி ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்தது. அவர் பெயர் அனோஷ்கா. இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2015-ம் ஆண்டு ஆத்விக் என்கிற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் ஷாலினி. திருமணத்துக்கு பின்னர் குழந்தைகள், குடும்பம் என பிசியானதால் நடிகை ஷாலினி சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. நடிகை ஷாலினிக்கு ஷாமிலி என்கிற தங்கையும், ரிச்சர்டு ரிஷி என்கிற தம்பியும் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் நடித்துள்ளனர்.
shalini ajithkumar net worth
நடிகை ஷாலினி இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி நடிகர் ஷாலினிக்கு சொந்தமாக ரூ.50 கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாம். தற்போது கோடி கோடியாய் சம்பளம் கொடுத்தாலும் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்கிற முடிவில் தீர்க்கமாக இருக்கும் ஷாலினி, கடைசியாக சினிமாவில் நடித்தபோது ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கினாராம். இதுதவிர பல்வேறு சொகுசு கார்களும் ஷாலினியிடம் உள்ளதாம். நடிகை ஷாலினியின் கணவர் அஜித்குமாரின் சொத்து மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மாமன்னன் மாஸ் ஹிட் ஆகியும்.... அடுத்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடும் மாரி செல்வராஜ் - காரணம் என்ன?