மாமன்னன் மாஸ் ஹிட் ஆகியும்.... அடுத்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடும் மாரி செல்வராஜ் - காரணம் என்ன?
மாமன்னன் படத்தின் மாஸ் வெற்றிக்கு பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வாழை திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.
vaazhai
இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பா.இரஞ்சித் தயாரித்த இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. முதல் படத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை உரக்கச் சொல்லி கவனம் ஈர்த்தார் மாரி செல்வராஜ். அவருக்கு பாராட்டுக்களும் குவிந்தன.
vaazhai movie
பரியேறும் பெருமாள் முடித்த கையோடு மாரி செல்வராஜுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் தனுஷின் கர்ணன் திரைப்படம். இப்படத்தை கனமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுத்து அதிலும் வெற்றி கண்டார் மாரி செல்வராஜ். இதையடுத்து மூன்றவதாக அவர் இயக்கிய திரைப்படம் மாமன்னன். நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான இதில் சமூக நீதி பற்றி பேசி இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vaazhai movie team
இப்படி சமூகத்தில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படங்களைக் கொடுத்து வரும் மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் தான் வாழை. சிறு பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
vaazhai movie OTT release
இந்நிலையில், வாழை படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம். மாமன்னன் என்கிற பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஹிட் அடித்த படத்தை கொடுத்துவிட்டு, மாரி செல்வராஜ் தனது அடுத்த படமான வாழை-யை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இதனை தயாரித்துள்ளதே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் என்கிற ஓடிடி நிறுவனம் தானாம். விரைவில் இதன் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டுக்குள் படையெடுக்க உள்ள 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் இவங்கதானா - லீக்கான விவரம்