சேலை பத்திக்கிச்சு.. பயத்துல தளபதி விஜய்யை அறைஞ்சிட்டேன்..! வலியை வெளிய காட்டாம மனுஷன் என்ன சொன்னார் தெரியுமா?
நடிகை சங்கவி, தளபதி விஜய்யுடன் 'கோயபுத்தூர் மாப்பிள்ளை' படத்தில் நடித்த போது, நடந்த ஒரு ரணகளமான சம்பவம் குறித்து, பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Sanghavi Debut in Ajith Movie:
நடிகை சங்கவி தல அஜித் நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான 'அமராவதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதைத்தொடந்து நடிகர் விஜயுடன் 'ரசிகன்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு, கன்னட, உள்ளிட்ட மொழிப் படங்களில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
Vijay and Sanghavi Movies:
90-களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சங்கவி. இளைய தளபதி விஜயுடன் மட்டும் 'விஷ்ணு', 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை', 'நிலவே வா' உள்ளிட்ட படங்களில் ஓவர் ரொமான்டிக் காட்சியில் கூட நடித்து பின்னி பெடல் எடுத்தவர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Sanghavi Marriage Life:
இவர் ஆரம்பத்தில் ஏற்று நடித்த படங்களில் கூடுதல் கவர்ச்சி இருந்தாலும், அது எந்த விதத்திலும் ஆபாசமாக பார்க்கப்படவில்லை. 35 வயதுக்கு பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய 42 வயதில் முதல் குழந்தைக்கு சங்கவி தாயான நிலையில், தற்போது திரையுலகில் இருந்து விலகி முழுக்க முழுக்க குடும்பத்தலைவியாக கணவர் - குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.
Sanghavi Recent Interview
இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், கோயபுத்தூர் மாப்பிள்ளை ஷூட்டில் ஸ்பாட்டில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். "கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் "ஒரு தேதி பார்த்தால்" என்ற பாடலின் சீனில் நெருப்பு முகத்திற்கு குறுக்கே போகும். அப்போது விஜய் எனது சேலையை இழுப்பார். நான் அவரை ஒரு அறையவேண்டும்
Sanghavi Slapped Vijay:
இந்த ஒரு காட்சிக்காக பல டேக்குகள் எடுக்கப்பட்டதாகவும், கடைசியில் சங்கவி தாவணியில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்து எரிய வைத்துள்ளனர். அப்போது... பயந்து போன சங்கவி விஜய் தாவணியை இழப்பதற்கு முன்பாகவே விஜய்யை பளார் என அறைந்து விட்டாராம். அப்போது விஜய், அடித்தால் காதிலிருந்து சத்தம் வரும் என்று கேள்வி பட்டுள்ளேன். அதை இப்போதுதான் அனுபவப்பட்டேன் என்று கூறியதாக சங்கவி தெரிவித்துள்ளார்.