- Home
- Gallery
- 61 வயதில் குட்டை டவுசருடன்... தாய்லாந்தில் உள்ள கிராபி தீவில் பேரன் - பேத்தியோடு சில் பண்ணிய ராதிகா! போட்டோஸ்!
61 வயதில் குட்டை டவுசருடன்... தாய்லாந்தில் உள்ள கிராபி தீவில் பேரன் - பேத்தியோடு சில் பண்ணிய ராதிகா! போட்டோஸ்!
நடிகை ராதிகா, தன்னுடைய மகள், பேரன், பேத்தி உள்ளிட்ட ஒட்டு மொத்த குடும்பத்துடனும் கிராபி தீவில் ஜாலி பண்ணிய புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதி ராஜாவால் வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தப்பட்டு, முன்னணி ஹீரோயினாக மாறியவர் நடிகை ராதிகா.
பழம்பெரும் நடிகர் MR ராதாவின் மகளும், ராதா ரவியின் சகோதரியுமான இவர்... 80-பதுகளில் ரஜினி, கமல், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனை காதலித்து திருமணம் செய்த ராதிகா, ஒரே வருடத்தில் அவரிடம் இருந்து பிரிந்தார்.
பின்னர் வெளிநாட்டை சேர்ந்த காதலரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சில வருடத்திலேயே விவாகரத்தில் முடிந்த நிலையில், தன்னுடைய இரண்டாவது கணவர் மூலம் பிறந்த மகள் ரேயானுடன் அம்மாவுடன் வசித்து வந்தார்.
தீவிரமாக நடிப்பிலும், ரேடான் நிறுவனம் மூலம் சீரியல் தயாரிப்பு மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தயாரித்த ராதிகாவுக்கு, பிரபல நடிகர் சரத்குமாருடன் ஏற்பட்ட காதல் பின்னர் திருமணத்தில் முடிந்தது.
தற்போது ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ராகுல் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். தன்னுடைய 61 வயதிலும், மிகவும் சுறுசுறுப்பாகவும் ஃபிட்னஸ் மீது அதிக அக்கறை காட்டி வருபவர் ராதிகா.
யுவனும் வேண்டாம்.. அமீனும் வேண்டாம்..! ஃப்ரெஷ்ஷான இசையமைப்பாளரை களம் இறக்கும் தளபதியின் மகன் சஞ்சய்!
இந்த மாதம் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவின் மகளான நடிகை வரலட்சுமி திருமணம் தாய்லாந்தில் நடந்தது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தயும் ஒரு சித்தியாக இல்லாமல், அம்மாவாக இருந்து இழுத்து போட்டு கொண்டு செய்தார்.
வரலட்சுமி திருமண ஒவ்வொரு அசைவுகளிலும்... ராதிகா இருந்ததை பார்க்க முடிந்தது. தற்போது ராதிகாவின் மகள் ரேயான் வெளியிட்டுள்ள போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
அதாவது வரலட்சுமி சரத்குமாரின் திருமணத்திற்காக தாய்லாந்து சென்றபோது, ராதிகா மற்றும் ஒட்டுமொத்த குடும்பமும் கிராபி தீவுக்கு சென்றுள்ளனர்.
அங்கு குடும்பத்தினர் மற்றும் பேரன் - பேத்திகளுடன் , ராதிகா குட்டை டவுசரில் செம்ம சில் செய்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த போடோஸில் வரலட்சுமி சரத்குமார், தாலி செயினுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே திருமணத்திற்கு பின்னர்.. குடும்பமே, கார்பி தீவில் என்ஜாய் செய்துள்ளது தெரிகிறது.