- Home
- Gallery
- குஷ்பூவுக்கு அந்த 41 வயது நடிகர் மீது கிரஷா..? நயன்தாரா, ரம்பாவுக்கு கூட அவருனா செம்ம கிரேசி..! யார் தெரியுமா?
குஷ்பூவுக்கு அந்த 41 வயது நடிகர் மீது கிரஷா..? நயன்தாரா, ரம்பாவுக்கு கூட அவருனா செம்ம கிரேசி..! யார் தெரியுமா?
பிரபல இளம் ஹீரோவின் நடன அசைவுக்கு குஷ்பூ உள்ளிட்ட சீனியர் நடிகைகள் முதல் ராஷ்மிகா வரை தீவிர ரசிகர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் Jr NTR. நடிகரும், அரசியல்வாதியுமான நந்தமுரி ஹரிகிரிஷ்ணாவின் மகனான இவர், குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் ஹீரோவாக மாறியவர். Ninnu Choodalani என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஜூனியர் என்டிஆரின் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இதை தொடர்ந்து வெளியான ஸ்டூடென்ட் நம்பர் 1, சுப்பு, ஆடி போன்ற அடுத்தடுத்த படங்கள் இவரை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக மாற்றியது.
தெலுங்கு படங்களில் மட்டுமே தீவிரம் காட்டிய ஜூனியர் என்டிஆரை, பான் இந்தியா பிரபலமாக மாற்றியது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், 2022-ஆம் ஆண்டு வெளியான 'RRR' திரைப்படம். இந்த படத்தில் ராம் சரணும் மற்றொரு ஹீரோவாக நடித்திருந்தார். தேச விடுதலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், சுதந்திர போராட்ட வீரர் கொமரம் பீம் வேடத்தில் தான் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார்.
யுவனும் வேண்டாம்.. அமீனும் வேண்டாம்..! ஃப்ரெஷ்ஷான இசையமைப்பாளரை களம் இறக்கும் தளபதியின் மகன் சஞ்சய்!
இப்படம் உலக அளவிலான ரசிகர்களை ஜூனியர் என்டிஆருக்கு பெற்று தந்த நிலையில், தற்போது 'தேவரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பாக்கப்படும் படமாக மாறியுள்ள இந்த படத்தில், ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
நடிப்பை தாண்டி ஜூனியர் என்டிஆரிடம் அனைவரும் விஜயர்ந்து பார்க்க கூடிய விஷயம் அவரது நடன அசைவுகள் தான். இவரின் டான்ஸ் ஸ்டெப்புக்கு ஏராளமான நடிகைகள் கூட கிரேசி என ஓபனாக கூறியுள்ளனர். குறிப்பாக நடிகை குஷ்பூ ஜூனியர் என்டிஆர் நடனம் மீது தனக்கு கிரஷ் உள்ளதை ஒருமுறை கூறியுள்ளார்.
actress nayanthara new movie
இவரை தவிர நடிகை ரம்பா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் கிரேசி என தெரிவித்துள்ளனர். ஜூனியர் என்டிஆர் இதுவரை நடித்திராத வித்யாசமான வேடத்தில் நடித்து வரும், 'தேவரா' திரைப்படம் செப்டம்பர் 27-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சைப் அலிகானும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.