- Home
- Gallery
- ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் கவர்ச்சியில்... சல்லடை போன்ற பிங்க் நிற சேலையில் ரசிகர்களை சாய்த்த மாளவிகா மோகனன்!
ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் கவர்ச்சியில்... சல்லடை போன்ற பிங்க் நிற சேலையில் ரசிகர்களை சாய்த்த மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனன், பிங்க் நிற சேலையில்... அழகு தேவதை போல் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் போது எடுத்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளத்தில் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்கள் மனதை ரணகளம் செய்து கொண்டிருக்கும், கேரளத்து பைங்கிளியான மாளவிகா மோகனின் சமீபத்திய பிங்க் சேலை புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
மும்பையில் படித்து முடித்த... கையோடு மலையாளத்தில் 'பட்டம் போலே' என்கிற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.
இந்தப் படத்தை தொடர்ந்து கன்னடம், ஹிந்தி, போன்ற மொழிகளில் கவனம் செலுத்திய மாளவிகா மோகனன், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' படத்தில் பூங்கொடி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
'பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சில நிமிடங்களே வரும் காட்சியில் மாளவிகா மோகனன் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவனிக்கப்பட்ட ரோலாக இது மாறியது.
Radhika: 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ராதிகாவுக்கு முன்பு நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா?
இதைத் தொடர்ந்து அதிரடியாக 2021 ஆம் ஆண்டு தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல்முறையாக இணைந்து நடித்த 'மாஸ்டர்' படத்தில் கதாநாயகியாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
மாஸ்டர் படத்திற்கு பின்னர், மாளவிகா மோகனன் தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'மாறன்' திரைப்படம் படுதோல்வியை தழுவிய நிலையில், சமீப காலமாக தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்காமல், தனித்துவமான கதைகளத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் ஹீரோவாக நடித்து விரைவில் வெளியாக உள்ள தங்கலான் படத்தில் அவந்திகா என்கிற சூனியக்கார பெண்ணாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தவிர இவரின் கைவசம் 'தி ராஜ் சபா' படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகவும், ருத்ரா என்கிற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தன்னை படு பிசியாக வைத்துக் கொள்ளும் மாளவிகா மோகன், அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அப்படி தான் சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியின் பிரெஸ் கான்பிரென்ஸில் மாளவிகா, சல்லடை போன்ற பிங்க் நிற புடவையில், ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் அணிந்து பேரழகில் ஜொலிக்கும் தேவதை போல் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவர் வெளியிட, அந்த போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.