- Home
- Gallery
- இயக்குனராக இருக்கும் போது லட்சத்தில் சம்பளம்! நடிகரானதும் கோடியில் புரளும் SJ சூர்யா சொத்து மதிப்பு விவரம்!
இயக்குனராக இருக்கும் போது லட்சத்தில் சம்பளம்! நடிகரானதும் கோடியில் புரளும் SJ சூர்யா சொத்து மதிப்பு விவரம்!
இயக்குனராக இருந்து நடிகராக மாறி, தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தி வரும் எஸ் ஜே சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

SJ Suryah
திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா, ஹோட்டலில் வேலை செய்து கொண்டு தான் லயோலா கல்லூரியில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்து முடித்தார். ஒரு ஹீரோவாக தன்னை சினிமாவில் நிலை நிறுத்திக் கொள்ள ஆசைப்பட்ட எஸ் ஜே சூர்யா நிதி நெருக்கடி காரணமாக உதவி இயக்குனராக சேர்ந்து, திரைப்படங்களில் பணியாற்ற துவங்கினார்.
SJ Suryah
பாக்யராஜ், பாரதி ராஜா, வசந்த், போன்ற முன்னணி இயக்குனர்களிடம் பணியாற்றும் போது... 'கிழக்கு சீமையிலே, 'ஆசை' போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு, நடிகர் அஜித்தை டபுள் ஆக்ஷனில் நடிக்க வைத்து, எஸ் ஜே சூர்யா இயக்கிய திரைப்படம் 'வாலி'. இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது .
SJ Suryah
இந்த படத்தில் பணிபுரியும் அப்போது மிகக் குறைவான சம்பளமே பெற்ற எஸ் ஜே சூர்யா, தன்னுடைய அடுத்த படமான குஷி படத்தை இயக்குவதற்காக சில லட்சங்களை சம்பளமாக பெற்றார். குஷி படத்தின் அட்வான்ஸ் தொகையை வாங்கி, தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றி, இயக்குனராக மாற முயற்சி செய்து வந்த ஏழு உதவி இயக்குனர்களுக்கு... பைக் வாங்கிக் கொடுத்தாராம். அதில் ஏ ஆர் முருகதாஸும் ஒருவர் என்றும், தற்போது வரை அந்த பைக்கை ஏ.ஆர் .முருகதாஸ் பத்திரமாக வைத்திருப்பதாக மறைந்த நடிகர் மாரி முத்து பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
மெல்ல மெல்ல SJ சூர்யாவிற்குள் தூங்கி கொண்டிருந்த நடிகன் வெளியே வர... 'நியூ' படத்தை அவரே இயக்கி, தயாரித்து நடித்தார். தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை களத்தில் உருவான இப்படம் சில எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது பின்னர் மகாநடிகன், அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.
Top 10 Serial TRP: சன் டிவி சீரியல்களை TRP-யால் அலறவிடம்... விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' தொடர்!
ஒரு கட்டத்தில் எஸ் ஜே சூர்யா, நடித்து வந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில்.... கெஸ்ட் ரோலில் மட்டுமே தலை காட்டினார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான 'இறைவி' படத்தில், எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆனார்.
ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா, மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிரள வைத்தார். தற்போது ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பொருந்தி நடிக்கும் ஆளுமையாக இருக்கும் எஸ் ஜே சூர்யா சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்திலும் நடித்திருந்தார். மேலும் இந்தியன் 3 திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதைத் தவிர விரைவில் வெளியாக உள்ள ராயன், கேம் சேஞ்சர், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், வீர தீர சூரன், போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இன்று தன்னுடைய 56-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் முரட்டு சிங்கிள் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
SJ Suryah
அதன்படி, எஸ் ஜே சூர்யா.. இறைவி படத்திற்கு பின்னர் கோடிகளில் சம்பளம் வாங்க துவங்கிய நிலையில், தற்போது தான் நடிக்கும் படங்களுக்கு 5 கோடி முதல் ஏழு கோடி வரை சம்பளமாக பெருகிறாராம். இதைத் தவிர சென்னையில் இவருக்கு சொந்தமாக வீடு, அப்பார்ட்மெண்ட் போன்றவை உள்ளன. சொந்த ஊரிலும் பல இடங்களை வாங்கி போட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய அக்கா செல்விக்கு மிகப்பெரிய பங்களா ஒன்றையும் கட்டி கொடுத்துள்ளாராம்.
பி எம் டபிள்யூ இஸட் 4 ரோட்ஸ்டேர் மெல்போன் ரெட் என்கிற சொகுசு கார் உள்ளிட்ட 3 சொகுசு கார்களை இவர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக தன்னால் முடிந்த வரை பிறருக்கு உதவிகள் செய்வதிலும் ஆர்வம் காட்டி வரும் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு 150 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.