MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Soori Twin Brother: நடிகர் சூரி ட்வின்சா? இவரின் தம்பி அப்படியே இவரை போலவே இருக்காரே... வைரலாகும் புகைப்படம்!

Soori Twin Brother: நடிகர் சூரி ட்வின்சா? இவரின் தம்பி அப்படியே இவரை போலவே இருக்காரே... வைரலாகும் புகைப்படம்!

காமெடி நடிகராக இருந்து, கதாநாயகனாக மாறியுள்ள நடிகர் சூரியுடன் பிறந்த ட்வின் பிரதர் லட்சுமணனின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 27 2024, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Actor Soori

Actor Soori

மதுரையை சொந்த ஊராக கொண்டவர் நடிகர் சூரி. சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆர்வத்தில் சென்னைக்கு வந்த சூரிக்கு, ஆரம்பத்தில் தங்க இடம் உணவு போன்றவற்றை கொடுத்து ஆதரவு கொடுத்தவர் மறைந்த நடிகர் போண்டாமணி தான். பின்னர் லைட் மேன் அசிஸ்டன்ட்டாக திரையுலகில் வேலை செய்து கொண்டே, காதலுக்கு மரியாதை, மறுமலர்ச்சி, சங்கமம், நினைவிருக்கும் வரை, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, ரெட், போன்ற பல படங்களில் குட்டி குட்டி வேடத்தில் நடித்தார்.
 

26

இவருக்கு திரையுலகில் முகம் தெரியும் அளவுக்கு வரவேற்பை பெற்று தந்த திரைப்படம் வெண்ணிலா கபடி குழு.  இந்த படத்தில் பரோட்டா சூரியாக இவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் நான் மகான் அல்ல, களவாணி, அய்யனார், குள்ளநரி கூட்டம், போன்ற பல படங்களில் தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

அம்மாவுக்கு ஃபேவரட் இடம்... பாவாடை தாவணியில் சென்னை முப்பாத்தம்மன் கோவிலுக்கு வந்த ஜான்வி கபூர்! போட்டோஸ்!

36
Soori

Soori

ஒரு கட்டத்தில் வைகை புயல் வடிவேலுவுக்கு ரெக்கார்டு போடப்பட்ட நிலையில், சூரிக்கு லீடு காமெடி ரோலில் நடிக்கும் வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றது. அந்த வகையில் சுந்தரபாண்டியன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தில்லு முல்லு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நையாண்டி, நிமிர்த்திடில், பாண்டியநாடு, ரம்மி, ஜில்லா, மான் கராத்தே, போன்ற படங்கள் இவருடைய கேரியரை தூக்கி நிறுத்தியது. பின்னர் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

46
Actor Soori

Actor Soori

கோடிகளில் சம்பளம் வாங்கும் காமெடி நடிகராக மாறிய பின்னர், காமெடியை தாண்டி தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். சூரி நடிப்பில் கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் கதையின் நாயகனாக நடித்து வெளியான விடுதலை பார்ட் 1, திரைப்படம் அல்டிமேட் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, 'கொட்டு காளி' என்கிற திரைப்படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று குவித்து வருகிறது.

Vadivelu: 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியில் திடீரென பெப்சி விஜயன் காலில் விழுந்த வடிவேலு! பின்னணி என்ன?
 

56

அதேபோல் சூரி நடித்துள்ள  'கருடன்'  திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விடுதலை பார்ட் 2 திரைப்படத்திலும் நாயகனாக சூரியன் நடித்து வருகிறார்.
 

66
Soori Twin Brother Lakshmanan

Soori Twin Brother Lakshmanan

சூரியை ஒரு நடிகராக தெரிந்த அளவுக்கு, அவருடைய குடும்பம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நடிகர் சூரி அவருடைய அப்பா -  அம்மாவுக்கு இரட்டைப் போராகப் பிறந்தவர். இவருக்கு ராமன் என பெயரிட்ட அவருடைய பெற்றோர், இவருடைய தம்பிக்கு லட்சுமணன் என பெயர் வைத்தனர். தற்போது சூரியன் ஹோட்டல் பிசினஸை கவனித்து வரும் லட்சுமணன் பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் நடிகர் சூரி போலவே இருப்பதாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Sakshi : வில்லேஜ் பியூட்டியாக மாறிய மாடர்ன் மங்கை.. சொக்க வைக்கும் போஸில் சாக்ஷி அகர்வால் - கியூட் பிக்ஸ்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved