- Home
- Gallery
- Vadivelu: 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியில் திடீரென பெப்சி விஜயன் காலில் விழுந்த வடிவேலு! பின்னணி என்ன?
Vadivelu: 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியில் திடீரென பெப்சி விஜயன் காலில் விழுந்த வடிவேலு! பின்னணி என்ன?
சன் டிவி நிகழ்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வைகைப்புயல் வடிவேலு, திடீரென போட்டியாளராக இருக்கும் நடிகரும், ஸ்டண்ட் கலைஞருமான பெப்சி விஜயன் காலில் விழுந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

top cooku dupe cooku
விஜய் டிவியில், சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கும் குக் வித் கோமாளியை பின்னுக்கு தள்ளும் விதத்தில், அப்படியே அதே நிகழ்ச்சியை காப்பியடிக்கும் விதத்தில் ஒரு சில மாற்றங்களுடன் சன் டிவியில் தற்போது துவங்கப்பட்டுள்ளது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி. இதில் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய வெங்கடேஷ் பட் நடுவராக உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி, முன்னாள் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியிலும் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் கடந்த சீசனில் கோமாளியாக கலந்து கொண்ட சூப்பர் சிங்கர் பரத், ஜி பி முத்து, ஆகியோர் டூப் குக்காக இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை மோஷன் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.
தஞ்சையில் பிறந்து... சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரீல் மகளாக ஆக்ஷனில் டஃப் கொடுத்த நடிகையா இவங்க?
மே 19ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை, ராகேஷ் தொகுத்து வழங்கி வருகிறார். போட்டியாளர்களாக சிங்கம் புலி, சுஜாதா சிவக்குமார், சாய் தீனா, நரேந்திர பிரசாத், பெப்சி விஜயன், சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, சைத்ரா ரெட்டி, ஷாலி நிவிகாஷ், ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
top cooku dupe cooku
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் வடிவேலு இந்த வாரம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் உள்ளே வந்த நடிகர் வடிவேலு போட்டியாளராக இருந்த பெப்சி விஜயனின் காலில் விழுந்து வணங்கியது பாலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
top cooku dupe cooku
மேலும் அவரை பற்றி பேசிய வடிவேலு, "அண்ணன் விஜயன் மாஸ்டர் எனக்கு மிகவும் முக்கியமானவர். அவருக்கு இல்லாத திறமைகளே இல்லை. மாஸ்டர் விஜயன் எல்லா மொழிகளிலும் பேசக்கூடியவர். அதேபோல நிறைய புத்தகங்களை படிப்பவர். சண்டையில் மட்டுமல்ல நடிப்பிலும் அவர்தான் எனக்கு குருநாதர். அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அதை போல் சிங்கம் புலி அண்ணனும் இங்கு வந்திருக்கிறார். அவருக்கும் நடிப்பில் மட்டுமல்லாமல், நிறைய திறமைகளை கொண்டவர் என பாராட்டி பேசி இருக்கிறார்.
top cooku dupe cooku
பொதுவாக நடிகர் வடிவேலு தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க மாட்டார், சக நடிகர் - நடிகைகளின் திறமைகளை மதிக்காமல் அசிங்கப்படுத்துவது போல் நடந்து கொள்வார் என பலர் பேட்டிகளில் கூறிவரும் நிலையில், நேற்று அவர் நடந்து கொண்ட விதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.