"அரைகுறை ஆடையில் பெண்கள்".. "எங்கிருந்துடா வரீங்க" - ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்வை வறுத்தெடுக்கும் நடிகர் ரஞ்சித்!
Happy Street : ஹேப்பி ஸ்ட்ரீட் என்பது ஒரு பிரபல நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முன்முயற்சியாகும். இது மோட்டார் வாகனங்களை பயன்படுத்தாமல், மக்களை ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமை காலையிலும் பலவிதமான செயல்பாடுகள் மூலம் சமூகமாக அவர்களை இணைக்க ஊக்குவிக்கிறது.
Ranjith about Happy Streets
இந்நிலையில் இந்த முன்னெடுப்பு குறித்து தனது கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ள பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் ரஞ்சித், ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை கடுமையாக சாடி பேசி உள்ளார். பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து சாலையில் நடனம் ஆடுவது ஏற்புடையது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
Happy Streets chennai
இளைஞர்கள் நடுத்தெருவில் அரைகுறை ஆடைகளோடு அனைவரும் இணைந்து ஆடுவது ஏற்புடையது அல்ல என்றும், தனக்கு மட்டும் அரசு பதவிகள் கிடைத்தால் அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து விடுவேன் என்றும் மிகவும் காட்டமாக பேசியுள்ளார் நடிகர் ரஞ்சித்.
இளைஞர்கள் அரைகுறை ஆடை அணிந்து நடனமாடுவது குறித்து தான் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும், ஆனால் அதற்கு என்று பிரத்தியேகமான இடங்கள் இருப்பதினால் அங்கே சென்று அவர்கள் தங்களுக்கு விருப்பமானதை செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Happy Streets
ஆரம்ப காலத்தில் செல்போன் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது ஆனால் இன்று அது பேரழிவுக்கான ஒரு பாதையாக அமைந்திருக்கிறது. அதேபோலத்தான் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளும் ஆரம்பத்தில் சிறியதாக தோன்றி பிறகு பேரழிவாக மாறும், ஒரு தாய்லாந்து போல தமிழகம் மாறுவதற்கான வழி இது என்று அவர் கூறினார்.
கோவையிலும் மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை கொண்டாடும் நாம், அதே கோவையில் நடைபெறும் வல்லிக்கும்மி போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். இதுவே நமது கலாச்சாரம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D