சேகர் இயக்கத்தில் தனுஷ் 51.. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட Political கதையாம் - ஆனா இசை ARR இல்ல.. அவராம்!
Dhanush 51 Update : பிரபல நடிகர் தனுஷ் தற்பொழுது தனது 50வது திரைப்பட பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இந்த திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருடைய 51வது திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
Dhanush 50
பிரபல நடிகர் தனுஷ் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார் என்றால் அது நிச்சயம் மிகையல்ல. அந்த வகையில் பா பாண்டி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக, இயக்குனராக களம் இறங்கும் தனுஷ், தனது ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி, நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் இருந்து விலக முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ்... எல்லாத்துக்கும் காரணம் ரஜினி தானாம்
Dhanush 51
அந்த திரைப்பட பணிகளை முடித்த பிறகு தெலுங்கு திரை உலகில் பிரபலமான இயக்குனரான சேகர் கமுலா அவர்களுடைய இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அரசியல் கதைகளம் கொண்ட, பல உண்மை சம்பவங்களை தழுவிய கதையாக இந்த திரைப்படம் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Rashmika
பிரபல நடிகர் நாகர்ஜுனா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க உள்ளார் என்றும். பிரபல நடிகை ராஸ்மிகா மந்தானா இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க உள்ளதாக ஆரம்ப கட்டத்தில் கூறப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
DSP and Nagarjuna
ஆனால் தற்பொழுது இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி மற்றும் வேங்கை ஆகிய இரு திரைப்படங்களும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.