சச்சின், கெய்க்வாட் சாதனையை முறியடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் – சிஎஸ்கேக்கு எதிராக சதம் விளாசி சாதனை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 59ஆவது லீக் போட்டியில் சச்சின் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரது சாதனையை தமிழக வீரர் சாய் சுதர்சன் முறியடித்துள்ளார்.
Sai and Gill
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 59ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து ரன்கள் குவித்துள்ளது.
Sai Sudharsan
சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து சாதனை மேல் சாதனை படைத்தனர். இந்த சீசனில் 2ஆவது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதல் பவர்பிளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் குவித்தது.
Gujarat Titans vs Chennai Super Kings, 59th Match
இந்தப் போட்டியில் சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசத்ம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் 25 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். ஒரு இந்தியராக அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இதற்கு முன்னதாக சச்சின் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் 31 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்துள்ளனர்.
Gujarat Titans vs Chennai Super Kings, 59th Match
திலக் வர்மா 33 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்துள்ளார். இவர்கள் தவிர ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷார் மார்ஷ் 21 இன்னிங்ஸ்களிலும், சிம்மன்ஸ் 23 இன்னிங்ஸ்களிலும், மேத்யூ ஹைடன் 25 இன்னிங்ஸ்களிலும், சாய் சுதர்சன் 25 இன்னிங்ஸ்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் 26 இன்னிங்ஸ்களிலும் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளனர்.
Sai Sudharsan and Shubman Gill
இதே போன்று சுப்மன் கில் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். முதல் 10 ஓவர்களில் குஜராத் 107 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்த ஜோடி இணைந்து 148 ரன்கள் எடுத்திருந்த போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் எடுத்து சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இந்த ஜோடி கடந்த ஆண்டு 147 ரன்கள் எடுத்திருந்தது. 15 ஓவர்களில் குஜராத் 190 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சுப்மன் கில் 49 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4ஆவது சதம் அடித்து சாதனை படைத்தார்.
Sai Sudharsan
இதன் மூலமாக ஒரு இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் அதிக முறை சதம் அடித்தவர்களின் பட்டியலில் கில் 6 சதங்கள் அடித்து 6ஆவது பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அப்போது குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 200 ரன்கள் குவித்தது. இதே போன்று தமிழக வீரரான சாய் சுதர்சன் 50 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
Gujarat Titans vs Chennai Super Kings, 59th Match
இதன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர். இதன் மூலமாக ஒரு அணியில் 2 வீரர்கள் சதம் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளனர். இந்த சீசனில் இருவரும் முதலிடம் பிடித்துள்ளனர். இதற்கு முன்னதாக 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் RCB vs GL, SRH vs RCB, அணிகளுக்கு இடையில் நடந்த போட்டிகளில் ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.
Gujarat Titans vs Chennai Super Kings, 59th Match
ஆனால், சாய் சுதர்சன் 51 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்த சீசனில் விக்கெட் இழப்பின்றி முதல் முறையாக 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து சாதனை படைத்துள்ளனர். இதே போன்று சுப்மன் கில்லும் 55 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 104 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டேவிட் மில்லர் 16 ரன்னும், ஷாருக் கான் 2 ரன்னும் எடுக்கவே குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது.