MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சமூகவலைதளங்களில் இருந்து விலக முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ்... எல்லாத்துக்கும் காரணம் ரஜினி தானாம்

சமூகவலைதளங்களில் இருந்து விலக முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ்... எல்லாத்துக்கும் காரணம் ரஜினி தானாம்

லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் 6 மாதங்களுக்கு சமூக வலைதளங்களில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக கூறி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 31 2023, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
lokesh kanagaraj

lokesh kanagaraj

யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல், கமல்ஹாசனின் படங்களைப் பார்த்தே சினிமாவை முழுமையாக கற்றுக்கொண்டு கோலிவுட்டில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் படத்தின் மூலம் தன்னுடைய திறமையை நிரூபித்து, பின் கைதி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் நட்சத்திர இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இதையடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Leo director lokesh kanagaraj

Leo director lokesh kanagaraj

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது குருவான கமல்ஹாசனுக்கு விக்ரம் என்கிற ஒரு தரமான கம்பேக் படத்தை கொடுத்து கோலிவுட்டே கொண்டாடும் இயக்குனராக உருவெடுத்தார் லோகேஷ். பின்னர் விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைத்த அவர் லியோ படத்தை 9 மாதத்தில் இயக்கி முடித்து திரைக்கு கொண்டு வந்தார். இப்படி தொடர்ந்து 5 படங்கள் ஹிட் கொடுத்து கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
lokesh kanagaraj quit social media

lokesh kanagaraj quit social media

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் தலைவர் 171. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படம் எல்சியூவில் இல்லாததால் இதில் ரஜினியை வித்தியாசமாக காட்ட உள்ளதாக கூறி உள்ளார் லோகேஷ். ரஜினியின் வில்லத்தனம் தனக்கு பிடிக்கும் என்பதால் அதனை இப்படத்தில் முழுமையாக பயன்படுத்த உள்ளதாக பேட்டியில் அவர் கூறி இருக்கிறார்.

44
Rajinikanth, lokesh kanagaraj

Rajinikanth, lokesh kanagaraj

அதுமட்டுமின்றி அடுத்த 6 மாதத்திற்கு சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருக்க முடிவெடுத்துள்ளதாக லோகேஷ் கூறினார். ஏனெனில் தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதால் சோசியல் மீடியா பக்கம் செல்ல வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம் லோகேஷ். அவர் இதற்கு முன்னர் லியோ படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னர் இதே போல் சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஷண்முகம் சொன்ன விஷயம்... ஒட்டுக்கேட்டு போட்டு கொடுத்த சனியன் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
 
1st ODI • NZ vs IND 2026
Innings Break
NZNZ
185
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved