தீவிர ஆய்வில் இறங்கிய ரிஷப் ஷெட்டி.. காந்தாரா Prequel படப்பிடிப்பு விரைவில் துவங்கும் - சில சுவாரசிய அப்டேட்!
Kantara 2 Update : கடந்த சில வருடங்களாக கன்னட திரை உலகம் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்திற்கு மாறி உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. அதற்கு உதாரணமாக அமைந்த திரைப்படங்கள் தான் கேஜிஎப் மற்றும் காந்தாரா.
Kantara 2
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கன்னட படமாக இருந்த பொழுதிலும் தமிழ் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பெரிய அளவில் வரவேற்றனர்.
கோடிகளில் முதலீடு.. தொழிலதிபராக மாறி வரும் நயன்தாரா.. என்னென்னெ பிசினஸ் செய்றாங்க தெரியுமா?
Rishab Shetty
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நடித்து, இப்படத்தை இயக்கி வெளியிட்ட ரிஷப் செட்டியை நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
Rishab Shetty Movie
இந்நிலையில் காந்தாரா திரைப்படத்தின் Prequel தற்பொழுது உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டிசம்பர் மாதம் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்றும், இதற்காக தீவிரமாக பல்வேறு ஆய்வுகளை ரிஷப் செட்டி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. நவம்பர் மாதம் 27ஆம் தேதி இந்த படத்திற்கான பூஜை போடப்பட உள்ள நிலையில் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 300 முதல் 400 ADக்குள் நடக்கும் கதைக்களமாக இது அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.