MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மாதவன் கதை எழுத.. அவரை இயக்கும் தனுஷ் பட இயக்குனர்.. டைட்டில் வச்சாச்சு - முக்கிய ரோலில் கிளாசிக் நடிகை!

மாதவன் கதை எழுத.. அவரை இயக்கும் தனுஷ் பட இயக்குனர்.. டைட்டில் வச்சாச்சு - முக்கிய ரோலில் கிளாசிக் நடிகை!

Actor Madhavan New Movie : தமிழ் திரையுலகில் மாதவனுக்கு என்று ஒரு தனி மவுசு எப்பொழுதுமே உண்டு. பிரபல நடிகர் அரவிந்த் சாமிக்கு பிறகு, தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக பல ஆண்டுகளாக வளம் வந்தவர் தான் ஆர். மாதவன்.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 02 2023, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Alaipayuthe

Alaipayuthe

ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியான படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், சரியாக 23 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2000 ஆவது ஆண்டில் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான "அலைபாயுதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் மாறி உள்ளார் மாதவன். 

யாரு நம்ம எதிர்நீச்சல் மதுமிதாவா? அளவான கிளாமரில்.. Bestieயுடன் தாய்லாந்து பீச்சில் செம டான்ஸ் - வைரல் வீடியோ!

24
Anbe Sivam

Anbe Sivam

அலைபாயுதே படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், ரன் மற்றும் அன்பே சிவம் என்று தொடர்ச்சியாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த மாதவன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். அண்மையில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள மாதவன் இறுதியாக தமிழில் வெளியான ராக்கெட்டரி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

34
Rocketry

Rocketry

இது அவரே இயக்கி, தயாரித்து வெளியிட்ட திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது தமிழில் டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் மாதவன் பிரபல நடிகர் தனுஷ் அவர்களை வைத்து திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்ட மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை மாதவன் எழுதியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

44
Sharmila

Sharmila

தற்பொழுது இந்த திரைப்படத்திற்கு "அதிர்ஷ்டசாலி" என்று பெயரிடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வெளிநாடுகளில் தற்பொழுது பிஸியாக நடந்து வரும் இந்த சூழ்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மூத்த தமிழ் நடிகை ராதிகா நடித்த வருகிறார். மாதவனின் நாயகியாக -பிரபல கன்னட நடிகை ஷர்மிளா மன்றே நடித்து வருகின்றார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
ராதிகா சரத்குமார்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved