Body Odor: வேர்வையால் வரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும்... எளிமையான 5 வழிகள்!
வெயில் காலத்தில் பலரையும் அச்சப்பட வைக்கும், உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மிகவும் எளிமையான இந்த 5 வழிகளை ட்ரை பண்ணி பாருங்கள்.

Body odor
மழை காலத்தை விட, வெயில் காலத்தை சமாளிப்பது கொஞ்சம் எளிமையானது தான் என்றாலும், வெயிலில் அலைந்து திருந்து வேலை செய்பவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இந்த கோடை காலத்தில் சந்திக்கும் முக்கிய பிரச்சனை வேர்வையால் வரும் துர்நாற்றம்.
இது அனைவருக்குமே இருக்கும் பொதுவான பிரச்சனை என்றாலும் கூட... உடலில் இருந்து வரும் ஸ்மெல் அவர்களின் வாழ்வியல் மற்றும் உணவுகளை பொறுத்து வேறுபட கூடியது. அதிகப்படியான நான் வெஜ், பீப், மட்டன் போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கு வேர்வை நாற்றம் மிகவும் ஹெவியாக இருக்கும் இதனால் அவர்கள் மற்றவர்கள் பக்கத்தில் நிற்பதற்கு கூட அச்சப்பட்டு தங்களின் கானஃ பிடண்ட்டை இழப்பார்கள்.
இதுவே அதிகப்படியான நான் வெஜ் சாப்பிடாமல், காய்கறி, பழங்கள் போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கு வேர்வை வந்தாலும், அதில் இருந்து வரும் வாடை மற்றவர்களை முகம் சுழிக்க வைப்பது இல்லை. எனவே வெயில் காலங்களில் உங்களின் உணவுகளிலும் சில மாற்றங்களை செய்வது சிறந்தது.
நம் உடலில் வேர்வையில் கூட இரண்டு வகை உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? எக்ரைன் (eccrine), அபோக்ரைன் (apocrine) தான் அவை. இதில் எக்ரைன் என்பது உடல் முழுவதும் சுரக்கக் கூடியது. இந்த வகையான வியர்வையில் அதிக தண்ணீர் மற்றும் குறைந்த உப்பு இருக்கும். இது உடல் வெப்பம் மட்டுமல்லாது மன அழுத்தம், கோபம், பதட்டம், உடலுறவு, போன்ற உணர்வு பூர்வமான சமயங்களில் சுரக்கும்.
அபோக்ரைன் வியர்வை என்பது, முடி வளர்ச்சி உள்ள இடங்களில் மட்டும் சுரக்கும். அதாவது அக்குள், தலை போன்ற இடங்களில். இந்த வகை வியர்வையில் புரதச்சத்து, கார்போ ஹைட்ரேட், அம்மோனியம் போன்றவை இருக்கும். அதனால் முடி வளரும் இடங்களில் உங்கள் உடலின் தன்மையை பொறுத்து பாக்டீரியாக்கள் இருப்பதால் அவை சத்துகளை அழித்து துர்நாற்றம் வீசும் கெமிக்கல்களாக மாறுகின்றன. இதுவே துறுநாற்றம் வீச முக்கிய காரணம்.
இயற்கையாகவே நம் உடலில் வேர்வை சுரப்பது நல்லது. மேலும் இதை நாம் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் சில எளிய வழிமுறைகள் மூலம் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியும். நீங்கள் உங்களை தூய்மையாக வைத்து கொள்வது மிகவும் முக்கியம். காலை, இரவு என இரண்டு முறை குளியுங்கள். வாசனையுடன் இருக்க கூடிய பாடி வாஷ், சோப்பு போன்றவற்றை பயன்படுத்தும் போது துர்நாற்றம் குறையும்.
soap
அதே போல் ஆண்டிபாக்டீரியல் சோப் மூலம் குளிப்பது கிருமிகளை அழிக்கும். நீங்கள் தினமும் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒடிக்கலம் ஊற்றி குளிப்பது உங்களை மேலும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.
அவசர அவசரமாக குளித்து விட்டு... ஈரமாக நீங்கள் டைட்டாக அணியும் ஆடை காரணமாகவும் ஒருவித வாடை வீச துவங்கும். எனவே குளித்தவுடன் துண்டால் முழுமையாக உடலை துடைத்து விட்டு, பின்னர் ஆடைகளை அணிவது சிறந்தது.
வெய்யில் காலங்களில் முடிந்தவரை காட்டன் உடைகளையும், அதிகம் இறுக்கமாக இல்லாத ஆடைகளையும் அணிந்து பழகுங்கள். இதன் மூலம் உங்கள் உடலில் உள்ள வேர்வை அறியப்படும். பெண்கள் வெய்யிலில் செல்லும் போது, வேர்வை உடலில் தெரியாமல் அக்குள்களில் பேட் வைத்துக்கொள்வது ஜாக்கெட் அணிந்திருந்தால் உங்களின் வேர்வையை கட்டுப்படுத்த உதவும்.
வேர்வை ஸ்மெல் அதிகமாக வருவதை நீங்கள் உணர்ந்தால், குளித்த பின்னர் உடலில் அடிக்க கூடிய பவுடர் போட்டுகொண்டு, பின்னர் வாசனை திரவம், அடித்து கொள்வது நல்ல பலனை தரும். இந்த எளிய முறைகளை பயன்படுத்தி, உங்கள் பாடி ஓடருக்கு குட் பை சொல்லுங்க.