- Home
- Gallery
- Sunaina Lover: யூடியூப் பிரபலத்திற்கு 2-ஆவது மனைவியாகும் சுனைனா? இவர் தான் காதலரான.. தீயார் பரவும் புகைப்படம்!
Sunaina Lover: யூடியூப் பிரபலத்திற்கு 2-ஆவது மனைவியாகும் சுனைனா? இவர் தான் காதலரான.. தீயார் பரவும் புகைப்படம்!
நடிகை சுனைனா சமீபத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்த நிலையில், இவரை திருமணம் செய்துக்கொள்ள உள்ள பிரபலம் யார் என்பது பற்றிய தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

Sunainaa
தமிழ் சினிமாவில், நிலையான கதாநாயகி என்கிற இடத்தை பிடிக்காவிட்டாலும்... 15 வருடமாக தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை சுனைனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை பார்த்த பிறகு தான் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை தனக்குள் வந்ததாக, ரெஜினா பட விழாவில் போது கூறி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்த சுனைனா, தன்னுடைய ஆசையை அடைய முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார்.
Sunainaa
அதாவது கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே, மாடலிங் துறையில் கால் பதித்த சுனைனா, பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார். ஆரம்பத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்க துவங்கிய சுனைனா, பின்னர் தமிழில் நடிகை தேவயானியின் தம்பி நகுல் ஹீரோவாக அறிமுகமான 'காதலில் விழுந்தேன்' படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
மணக்கோலத்தில் சுடர்! அஞ்சலி கொடுத்த ஷாக், கடுப்பான மனோகரி - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
Sunainaa
இந்த படம் சுனைனா - நகுல் என இருவருக்குமே திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தில் இவர்கள் இருவரும் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும், மாசிலாமணி படத்தில் ஜோடி சேர்ந்தனர். இந்த படத்தில் நடிக்கும் போது... நகுல் - சுனைனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவர்கள் அடுத்ததாக ஒரு படத்தில் கூட இணையவில்லை என கூறப்படுகிறது.
Sunainaa
தமிழில் பரத்துக்கு ஜோடியாக திருத்தணி, அருள்நிதிக்கு ஜோடியாக வம்சம், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நீர்ப்பறவை, தளபதி விஜய் நடித்த தெறி, போன்ற பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு ரெஜினா என்கிற படத்தில் கதையின் நாயகியாக சுனைனா நடித்த நிலையில் அப்படம் படு தோல்வியை சந்தைத்தது.
sunaina
தற்போது 35 வயதாகும் சுனைனாவுக்கு, பட வாய்ப்புகளும் வருவது குறைந்து விட்ட நிலையில்... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்துள்ளார். அதன் படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதை.. கையில் ரிங் அணிந்திருந்த புகைப்படம் வெளியிட்டு தெரியப்படுத்தினார். ஆனால் இவர் யாரை காதலித்து திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்கிற எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஆனால் சுனைனா பொத்தி பாதுகாத்த அந்த விஷயம் இப்போது கசிந்து விட்டது. சுனைனா காதலித்து கரம்பிடிக்க உள்ளவர் ஒரு பிரபலம் தான். ஆனால் அவர் சினிமா பிரபலம் இல்லை. யூடியூப் பிரபலம். துபாய் யூடியூபரான காலித் அல் அமெரி என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் திருமணம் இந்த ஆண்டு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
யூடியூப் காலித் அல் அமெரி, சுனைனா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக வெளியிட்டது போன்ற அதே புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இந்த தகவலை கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் காலித் தெரிவித்தார். சுனைனா போலவே காலித் அல் அமெரியும் தான் திருமணம் செய்துகொள்ள உள்ள பெண் யார் என்பதை தெரிவிக்கவில்லை.
Sunainaa
40 வயதான காலித் அல் அமெரிக்கு ஏற்கனவே சலாமா என்பவருடன் திருமணம் ஆன நிலையில்... 14 வருடத்திற்கு பின்னர் சமீபத்தில் தான் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்ததாக அறிவித்தனர். சுனைனா இரண்டாவது மனைவியாக உள்ளது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சினிமா வட்டாரத்தில் கிடைத்த தகவலின் படி காலித் அல் அமெரி குடும்பை கொய்தியில் இருந்து வந்து, காதோடு காது வைத்தது போல் திருமண நிச்சயத்தை முடித்து கொண்டு சென்றுள்ளார்களாம். எனவே கூடிய விரைவில் இந்த விவகாரம் குறித்து சுனைனா வாய் திறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.