- Home
- Gallery
- நீங்க யார் அதை சொல்ல? நான் பீரியட்ஸ் டைம்லையும் கோவிலுக்கு போவேன்.! பாண்டியன் ஸ்டோர் நடிகை அதிரடி பேச்சு!
நீங்க யார் அதை சொல்ல? நான் பீரியட்ஸ் டைம்லையும் கோவிலுக்கு போவேன்.! பாண்டியன் ஸ்டோர் நடிகை அதிரடி பேச்சு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்த வி.ஜே.தீபிகா அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், எல்லா நாட்களிலும் நான் நான்வெஜ் சாப்பிடுவேன், பீரியட்ஸ் டைமிலும் கோவிலுக்கு போவேன் என கூறியுள்ளதற்கு, நெட்டிசன்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவணன் விக்ரம், தீபிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
TRP-யில் டாப் 10 இடத்தை தக்க வைத்திருந்த இந்த சீரியலுக்கு, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அண்ணன் தம்பிகளின்... பாசப்பிணைப்பை பயமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த சீரியலில், சரவணன் விக்ரமுக்கு ஜோடியாக, ஐஸ்வர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வி.ஜே.தீபிகா.
பின்னர் தன்னுடைய முகத்தில் அதிகமான முகப்பருக்கள் ஏற்பட்டதாலும், மேக்கப் அலர்ஜி காரணமாகவும் இந்த சீரியலை விட்டு இவர் விலகும் நிலை ஏற்பட்டது. இவர் வெளியேறிய பின்னர் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வந்தார்.
ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் நெகட்டிவாக காட்டப்பட துவங்கியதும், இனிமேல் இந்த சீரியலில் தன்னால் நடிக்க முடியாது என சாய் காயத்திரி விலக, மீண்டும் வி.ஜே.தீபிகா தன்னுடைய முகப்பரு பிரச்சனையை சரி செய்து கொண்டு வந்து இந்த சீரியலில் நடித்தார். மேலும் சரவணன் விக்ரம் மற்றும் தீபிகா இருவரும் காதலித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தீபிகா பிரபல ஊடகம் ஒன்றிற்கு அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், "நான் எல்லா நாட்களிலும் நான்வெஜ் சாப்பிடுவேன். Non வெஜ் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு போவேன். பீரியட்ஸ் டைமிலும் நான் கோவிலுக்கு போவேன். சாமி கும்பிடுவேன்.. பூஜை ரூமுக்கு போவேன். என்னை பொருத்த வரை அது என்னுடைய அய்யனார். எனக்கு உடம்பு சரியில்லை என்றால் ம் அவர் என்ன பார்த்துக்கொள்வார். அவர் என்ன ஒதுக்க மாட்டாரு. நீங்க யாரு என்ன ஒதுக்குவதற்கு? எனக்கு அவரை தெரியும் என்கிற ஒரு சென்டிமென்ட் உண்டு. இதன் காரணமாகவே நான் எப்போதுமே பூஜை அறைக்கு நார்மலாக சென்று விபூதி, குங்குமம் எடுத்து வைத்து கொள்வேன். அதே போல் நீங்க சொல்லாதீங்க, எந்த நாளில் நான் இதெல்லாம் பண்ணனும்... பண்ண கூடாதுன்னு.. நான் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று தீபிகா பேசியுள்ளதற்கு பலர் தங்களின் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வந்தாலும், சிலர் இவருக்கு எதிர்மறையான கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.