- Home
- Gallery
- காதல் மனைவி ஹனி மூன்! காற்று கூட நுழைய முடியாத நெருக்கம்; களைகட்டும் பிரேம்ஜி-யின் குடும்ப வாழ்க்கை! போட்டோஸ்
காதல் மனைவி ஹனி மூன்! காற்று கூட நுழைய முடியாத நெருக்கம்; களைகட்டும் பிரேம்ஜி-யின் குடும்ப வாழ்க்கை! போட்டோஸ்
Premgi Amaran And Indhu Romantic Photos: பிரேம்ஜி அமரனுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்து முடிந்த நிலையில், அவரின் காதல் மனைவி வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Premgi And Indhu Photos
கோலிவுட் திரையுலகின் இசை குடும்பமாக பார்க்கப்படும், இளையராஜா குடும்பத்து வாரிசான பிரேம்ஜி தன்னுடைய 45 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் தான் திருமண பந்தத்தில் இணைந்தார்.
Premgi And Indhu Romantic Photos
இந்நிலையில் இவர் திருமணம் செய்து கொண்டுள்ள இந்து, திரையுலகை சேர்ந்த பிரபலம் இல்லை என்றாலும் சமூக வலைதளத்தில் செம்ம ஆக்டிவாக இருப்பவர். இவர் பிரேம்ஜியுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் மற்றும் வீடியோஸ் சிலவற்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Premgi And Indhu Photos
பிரேம்ஜி தன்னுடைய பெரியப்பா, அப்பா, அண்ணன் யுவன் போல ஒரு இசையமைப்பாளராகவே விரும்பினார். இதனால் கங்கை அமரன் அவரை வெளிநாடுகளுக்கெல்லாம் அனுப்பி இசை பற்றிய படிப்பை படிக்க வைத்தார்.
Premgi And Indhu Romantic Photos
ஆனால் யுவனுக்கு கிடைத்தது போன்ற வரவேற்ப்பை பிரேம்ஜி-க்கு கிடைக்கவில்லை. எனவே அப்படியே கொஞ்சம் தன்னுடைய ட்ராக்கை கொஞ்சம் மாற்றி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
Premgi And Indhu Honeymoon Romantic Photos
அப்படி இவர் நடித்த மன்மதன் திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் கவனிக்க வைத்தது. இதை தொடர்ந்து, தன்னுடைய அண்ணன் இயக்கிய சென்னை 28 படத்திற்கு பின்னர் பிரேம்ஜியின் காமெடி மட்டும் அல்ல, பாடி லாங்குவேஜும் அதிகம் கவனிக்கப்பட்டது.
Premgi And Indhu Honeymoon Photos
அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். குறிப்பாக தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் ஹீரோவுடனே பயணிக்கும் காமெடியன் வேடத்தில் கவனம் ஈர்த்தார்.
Premgi And Indhu Photos
சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு பிரேம்ஜி வளர்ந்த போதிலும்... இவர் நடித்த படங்கள் படுத்து விட்டதால், தற்போது வரை காமெடியனாகவே நீடித்து வருகிறார்.
Premgi And Indhu Photos
மேலும் தற்போது தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' படத்திலும் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தான் பிரேம்ஜி திடீர் என தன்னுடைய திருமணம் குறித்த தகவலை வெளியிட்டார்.
Premgi And Indhu Photos
மேலும் கடந்த மாதம் இந்து - பிரேம்ஜி திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், இந்து அடிக்கடி தன்னுடைய காதல் கணவர் பிரேம்ஜி பற்றிய புகைப்படம் மற்றும் வீடியோசை வெளியிட்டு வருகிறார்.
Premgi And Indhu Photos
அந்த வகையில் தற்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் போது எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட, நெட்டிசன்கள் ஹனி மூன் ட்ரிப்பா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
கௌதமி, மனிஷா கொய்ராலா முதல் ஹிரா கான் வரை..! கொடூர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகைகள்!