MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சென்னை சர்வதேச விருதுகள்! சிறந்த நடிகர் வடிவேலு... சிறந்த படம் அயோத்தி! முழு விவரம் இதோ!

சென்னை சர்வதேச விருதுகள்! சிறந்த நடிகர் வடிவேலு... சிறந்த படம் அயோத்தி! முழு விவரம் இதோ!

21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பரிசுகளை வென்ற பிரபலங்கள், மற்றும் திரைப்படங்கள் குறித்த முழு விவரம் இதோ... 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 21 2023, 11:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, இந்த மாதம் டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று முடிவடைந்தது. மொத்தம் 57 நாடுகளின் 126 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொள்ள 25 தமிழ் படங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அதில் இருந்து 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ayothi Movie

Ayothi Movie

இறுதி நாளான இன்று, திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெற்றிபெற்றவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சிறந்த தமிழ் படமாக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் வெளியான 'அயோத்தி' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ஒரு லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குனர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், கே வெள்ளதுரை தயாரிப்பில் வெளியான 'உடன்பால்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.  இப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 50,000 பரிசாக வழங்கப்பட்டது. 

Legend Saravanan Next Movie: லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ் - சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!
 

35
Maamannan

Maamannan

சிறந்த நடிகர்கான விருது, மாமன்னன் படத்தில் நடித்த வைகைப்புயல் வடிவேலுவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது 'அயோத்தி' படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானிக்கு வழங்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் தலா 50,000 பரிசாக வழங்கப்பட்டது.

45
Por Thozhil

Por Thozhil

சிறந்த ஒளிப்பதிபாலதிக்கான விருது 'போர் தொழில்' படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.  சிறந்த பட தொகுப்பாளருக்கான விருது, 'போர் தொழில்' படத்தில் பணியாற்றிய ஸ்ரீஜித் சாரங் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதே போல் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது, 'மாமன்னன்' படத்தில் பணியாற்றிய சுரேந்திரன் ஜி என்பவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் விருதுகளும் பரிசுத்தொகை 50,000 வழங்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி மாற்றுத்திறனாளி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ரோஜா! காரணம் என்ன? வைரல் போட்டோஸ்!

55

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது 'செம்பி' படத்தில் நடித்த நிலாவுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன மாணவர்கள் இயக்கிய குறும்படத்தில், சிறந்த குறும்படமாக 'லாஸ்ட் ஹாட்ஸ்' என்கிற படம் தேர்வு செய்யப்பட்டு அதை இயக்கிய பகவத் என்கிற மாணவருக்கு பத்தாயிரம் பரிசாக வழங்கினர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
வடிவேலு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved