- Home
- Gallery
- 2023 Top 10 Melody Songs: 2023-ல் ரசிகர்களின் மனதை உருக வைத்த டாப் 10 மெலடி பாடல்கள்! உங்க ஃபேவரட் எது?
2023 Top 10 Melody Songs: 2023-ல் ரசிகர்களின் மனதை உருக வைத்த டாப் 10 மெலடி பாடல்கள்! உங்க ஃபேவரட் எது?
இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் இடம்பெற்ற, ரசிகர்களின் மனதை மயக்கிய டாப் 10 மெலடி பாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. இப்படி வெளியாகும் படங்களில், குறைத்த பட்சம் மூன்று அல்லது நான்கு பாடல்கள் இடம்பெறுகிறது. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகத்தில் இருந்தாலும், மெலடி பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில் 2023 வெளியான படங்களில், ரசிகர்கள் மனதை மயக்கிய டாப் 10 மெலடி பாடல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க..
பொன்னியின் செல்வன் 2 : 'சின்னசிறு நிலவே'
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன் 2'. ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படத்தில், நந்தினி மற்றும் ஆதித்த கரிகாலனின் சிறிய வயது காதலை காட்சிப்படுத்தும் வயதில் இடம்பெற்ற 'சின்னசிறு நிலவே' பாடல் அதிகம் ரசிக்கப்பட்டது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் உருவான இந்த பாடலை ஹரிச்சரன் பாடியிருந்தார்.
பொன்னியின் செல்வன் 2: 'அகநக'
இதைத்தொடர்ந்து 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தில் இடம்பெற்ற, மற்றொரு மெலடி பாடல் தான் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில்... குந்தவை மற்றும் வந்திய தேவனின் காதல் ரசம் பொழியும் பாடலாக அமைந்த 'அகநக' பாடல். இந்த பாடலுக்கு இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுத, சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த பாடலை பாடியிருந்தார்.
விடுதலை: 'காட்டு மல்லி'
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்திருந்தார். இளையராஜா இசையில், அவரே பாடிய காட்டு மல்லி பாடல் தற்போது வரை பல ரசிகர்களால் ரிப்பீட் மோடில் கேட்கப்படும் பாடலாக உள்ளது.
விடுதலை: 'உன்னோடு நடந்தா'
அதைப்போல் , விடுதலை படத்தில் இடம்பெற்ற உன்னோடு நடந்தா என்கிற மெலடி பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற டாப் 10 மெலடி பாடல்களில் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. இந்த பாடலை இசைஞானியில் இசையில் நடிகர் தனுஷ் மற்றும் அனன்யாபத் பாடியிருந்தனர்.
மாமன்னன்: 'நெஞ்சமே நெஞ்சமே'
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் கடைசியாக நடித்த திரைப்படம் மாமன்னன். அரசியலையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாதி ரீதியாக இழைக்கப்படும் அநீதி குறித்தும் தோலுரித்து காட்டப்பட்ட இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதியின் காதல் பாடலாக இடம்பெற்ற 'நெஞ்சமே நெஞ்சமே' பாடல் பல இளம் ரசிகர்களின் ஃபேவரட் பாடல்களில் ஒன்றாக உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இந்த பாடலுக்கு, யுக பாரதி லிரிக்கல் எழுத... விஜய் ஏசுதாஸ், சக்தி ஸ்ரீ கோபாலன், ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடியிருந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வாரிசு: சோல் ஆப் வாரிசு:
இயக்குனர் வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி, இந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்று 'வாரிசு'. இந்த படத்தில் அம்மா - மகன் பாசத்தை மையமாக வைத்து இடம்பெற்ற 'சோல் ஆப் வாரிசு' தளபதி ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ள மெலடி பாடலாகும். தமன் இசையில் இந்த பாடலை, இப்பாடலை கே எஸ் சித்ரா பாடி இருந்தார்.
வாத்தி: 'வா வாத்தி'
தெலுங்கு பட இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில், தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படத்தித்தது. இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில், ஸ்வேதா மேனன் பாடி இருந்த 'வா வாத்தி' பல பட்டி தொட்டி எங்கும் பலரையும் முணுமுணுக்க வைத்த காதல் மெலடி பாடலாக அமைந்தது.
டக்கர்: 'நிரா'
இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், சித்தார்த், திவ்யன்ஷா கௌஷிக் நடிப்பில் காதல் என்டர்டைனராக வெளியான திரைப்படம் டக்கர். இந்த படத்தில் கே.கார்த்திக் வரிகளில், சித் ஸ்ரீராம், கௌதம் வாசுதேவ் மேனன், மாற்றும் மாளவிகா சுதர்ஷன் பாடிய நிரா பாடல்... பெஸ்ட் மெலோடி பாடல்களில் ஒன்றாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது.
ஜெயிலர்: 'ரத்தமாரே'
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கிய திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் அனிருத் இசையில், விக்னேஷ் சிவன் வரிகளில் விஷால் மிஸ்ரா பாடிய ரத்தமாரே பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த பாடல்களில் ஒன்றாக உள்ளது.
குட் நைட்: 'நா காலி'
இயக்குனர் விநாயக சந்திரசேகரன் இயக்கத்தில், மணிகண்டன் - மேத்தா ரகுநாத் நடிப்பில் வெளியான திரைப்படம் குட் நைட். மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படத்தின் கதைக்களம் மிக எளிமையாக இருந்தாலும், இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இந்த படத்தில் சீன் ரோல்டன் மற்றும் கல்யாணி நாயர் பாடிய 'நா காலி' மெலடி பாடல் டாப் 10 மெல்லிசை பாடல்களில் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.