வீடியோ டெலிட் பண்ணா காசு தரேன்; யூடியூபரிடம் பேரம் பேசிய நயன்தாரா? கிளம்பிய புது சர்ச்சை
நடிகை நயன்தாராவை விமர்சித்த போட்ட வீடியோவை டெலிட் செய்தால் காசு தருவதாக நயன் தரப்பு தன்னிடம் பேசியதாக யூடியூப் பிரபலம் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Nayanthara
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சினிமாவை தாண்டி பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். அந்த வகையில் இவர் பெமி9 என்கிற நாப்கின் பிராண்டையும் நடத்தி வருகிறார். அந்த நாப்கின் கம்பெனியின் வெற்றி விழா அண்மையில் மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அந்த விழாவினால் சர்ச்சையிலும் சிக்கினார் நயன்தாரா.
Nayanthara Femi9 Event
தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு புரமோஷனாக இருந்தாலும் அதில் யூடியூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்களின் பங்கு அதிகம். அந்த வகையில் மதுரையில் நடந்த பெமி9 விழாவினை புரமோட் செய்யும் விதமாக அதற்கு சமூக வலைதள பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அந்த விழாவிற்கு நடிகை நயன்தாரா, பிறபகல் 12 மணிக்கு வருவதாக இருந்ததாம். ஆனால் அவர் அந்த விழாவுக்கு வந்ததோ மாலை 6 மணிக்கு. இதனால் 6 மணிநேரம் உணவு இன்றி அங்கிருந்தவர்கள் திண்டாடினர்.
இதையும் படியுங்கள்... 6 மணி நேரம் லேட்; அதிகார திமிரால் ரசிகர்களை கால்கடுக்க காக்க வைத்த நயன்தாரா!
Nayanthara Controversy
நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நயன்தாராவிடம் யூடியூப்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றபோது அங்கிருந்த ஒருவர், அவங்க நார்மல் பீப்புள் கிடையாது என பேசியது மிகவும் ட்ரெண்டாகி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நயன்தாரா பெமி9 விழாவில் நடந்தவற்றை விமர்சித்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரபலமான அடிபொலி ஃபுட்டி என்பவர் பதிவிட்டிருந்தார். பின்னர் நயன்தாரா தரப்பில் இருந்து அழைத்து அவரிடம் அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னார்களாம்.
Youtuber Slams Nayanthara
டெலிட் செய்தால் பணம் தருவதாகவும் கூறி பேரம் பேசினார்களாம். ஆனால் அந்த யூடியூபர் அதை டெலிட் செய்ய மறுத்துவிட்டாராம். பின்னர் இன்ஸ்டாகிராமில் முறையிட்டு அந்த நபர் பதிவிட்ட வீடியோவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து அதை டெலிட் செய்ய வைத்திருக்கிறார்கள். விமர்சனம் வைத்ததற்கு தன்னிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி நயன்தாரா செய்துள்ள இந்த செயலை வெளிச்சம் போட்டு காட்டிய அந்த யூடியூபரின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இது என்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை? OTT-யில் நேரடியாக ரிலீஸ் ஆகும் முக்கிய படம்!