தந்தையுடன் என்ன பிரச்சனை... பிரிந்து சென்றதற்கு யூடியூப் தான் காரணமா? முதன்முறையாக மனம் திறந்த இர்பான்
புகழ்பெற்ற யூடியூப்பராக வலம் வரும் இர்பான், தன் தந்தை பிரிந்து சென்றதற்கான காரணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.
சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரபலங்களுக்கும் தற்போது மவுசு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் யூடியூப்பின் வளர்ச்சி என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. குறிப்பாக தமிழில் யூடியூப் மூலம் பேமஸ் ஆன பிரபலங்கள் ஏராளம். அவர்களின் முக்கியமான ஒருவர் தான் முகமது இர்பான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தான் இர்பான் வியூஸ் என்கிற யூடியூப் சேனலை தொடங்கினார். ஆரம்பத்தில் சினிமா விமர்சன வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இதையடுத்து கார், பைக்குகள் பற்றி வீடியோ வெளியிட்டு வந்த இவர், ஒரு கட்டத்தில் ஃபுட் விலாகராக மாறினார். பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து அதை ரிவ்யூ செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு வருகிறார் இர்பான். இவரின் ஃபுட் விலாக் வீடியோக்களுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததன் காரணமாக அதிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிய இர்பான், இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து அதனையும் வீடியோவாக வெளியிட்டு பேமஸ் ஆனார்.
தற்போது தமிழ்நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் யூடியூப்பர் பட்டியலில் இர்பான் இடம்பிடித்துள்ளார். யூடியூப் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து, ஆடம்பர பங்களா, சொகுசு கார் என ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகிறார் இர்பான். இவருக்கு அண்மையில் திருமணம் ஆனது. அவரது திருமணத்தில் ஏராளமான சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர். யூடியூபர் இர்பான் யூடியூப் சேனல் தொடங்கி ஆறு வருடங்களுக்கு மேல் ஆகின்றது.
இந்த ஆறு வருடத்திலும் தினசரி வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருந்த இர்பான், மொத்தமாக 2 ஆயிரம் வீடியோ பதிவிட்டுள்ளார். இதில் 2 ஆயிரமாவது வீடியோ சற்று ஸ்பெஷலானது என்பதால், அந்த வீடியோவில் ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு வீடியோவாக இர்பான் பதிவேற்றி உள்ளார். அந்த வீடியோவில் முதன்முறையாக தன் தந்தை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் முகமது இர்பான்.
இதையும் படியுங்கள்... ‘புராஜெக்ட் கே’னா என்ன? ஹாலிவுட் தரத்தில் ரிலீஸ் ஆன கிளிம்ப்ஸ் வீடியோ - ‘கல்கி’ பிரபாஸ் இருக்காரு.. கமல் எங்க?
அதில் அவர் கூறியதாவது : “அவரை வீடியோவில் பார்த்திருக்க முடியாது. ஆரம்பத்தில் அவருக்கு நான் யூடியூப் வீடியோ பண்ணுவது பிடிக்கவில்லை. இந்த மாதிரி விஷயங்களை அவர் ரொம்ப வெளிப்படையாக பேசமாட்டார். பேசுனா ரொம்ப கோபப்பட்டு பேசுவார். அவருக்கு இதுலலாம் இஷ்டம் இல்ல. ஆரம்பத்தில் வீட்டுக்கே தெரியாம தான் யூடியூப்பில் வீடியோ பதிவிட்டேன். இதனாலேயே அம்மா - அப்பா இடையே சண்டையெல்லாம் வந்திருக்கு.
அவருக்கு இது சுத்தமா புடிக்கல. இப்போ அவர்கிட்ட பேசுறோம். அவருக்கு வேற வேற கோபங்கள், பிரச்சனைகள் எல்லாம் இருக்கு. என்னுடைய எல்லா விஷயங்களையும் வீடியோவில் நான் ஷேர் பண்ணிருக்கேன். ஆனால் அப்பா பற்றி போட முடியாம ஆனதற்கு காரணம் அவர் தான், அவர் பற்றி பேசினால் அவர் கோபப்பட்டுவிடுவாரோனு பயத்துல தான் நான் பேசல. என் அம்மாவும், அப்பாவும் இப்ப ஒன்னா இல்ல. அம்மா என்கூடவும், அப்பா தனியாவும் இருக்காங்க.
அவருக்கு புடிக்காத விஷயத்தை எதுக்கு பேசனும்னு தான் நான் பேசுதறதில்லை. அதுக்காக அவர் மீது மரியாதை இல்லாமல்லாம் இல்ல. எனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் அவர் தான் என்னுடைய அப்பா. என்னை வளர்த்தது அவர் தான். அவர் தான் சம்பாதிச்சு என்ன படிக்க வச்சிருக்காரு. எனக்காக நிறைய பண்ணிருக்கார். அதனால் அவர்மீது மரியாதை இருக்கு. என் கல்யாணத்துக்கு கூட அவரு வந்தாரு. அவரிடம் நான் தான் பேசி சமாதானப்படுத்தி வர வச்சேன்” என பேசி இருக்கிறார் இர்பான்.
இதையும் படியுங்கள்... வெக்கி தலைகுனிய வேண்டும்... கொடூரத்தின் உச்சம்! மணிப்பூர் சம்பத்துக்கு எதிராக பொங்கிய பிரபலங்கள்!