வெக்கி தலைகுனிய வேண்டும்... கொடூரத்தின் உச்சம்! மணிப்பூர் சம்பத்துக்கு எதிராக பொங்கிய பிரபலங்கள்!
மணிப்பூரில் இரண்டு பெண்களை, நிர்வாணமாக சாலையில் அழைத்து சென்று, கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையுமே கொந்தளிக்க வைத்துள்ள நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக பல பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில், பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் மெய்தீ சமூகத்தினருக்கும், மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், மே 3ஆம் தேதி முதல் கலவரமாக மாறியது. அதாவது மெய்தீ சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில், இதற்க்கு குக்கி சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இருதரப்பினருக்கும் இடையே... வன்முறை வெடித்துள்ளதால், மே 3 முதல் மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி வைரலானது. இரண்டு பெண்களை, சிலர் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என, அரசியல் வாதிகள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலமாக தங்களின் கருத்துக்களை முன் வைத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது.. பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ்... "மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்…. கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…" என பதிவிட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "மணிப்பூர் சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தம். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக என் இதயம் துடிக்கிறது. இந்தியாவில் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களை நிறுத்துவதற்கு முன் எப்போதும் இல்லாத கடுமையான தண்டனை உண்மையில் அவசியம். பாதிக்கப்பட்ட பெண்கள் குணமடைய எனது பிரார்த்தனைகள். என தெரிவித்துள்ளார்.
அதே போல் இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள நடிகை குஷ்பு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மணிப்பூர் வீடியோ விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களாகிய நாம் தலைகுனிக்க வேண்டும். பரஸ்பர குற்றச்சாட்டுகளை தவிர்த்து, இதுபோன்று இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.