நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த மகாநடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நாக் அஸ்வின். முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கிய இவருக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் புராஜெக்ட் கே. பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இதுதவிர இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனும் இணைந்தார். அவர் இப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஓராண்டாக புராஜெக்ட் கே என்றால் என்ன என்பதை வெளியிடாமல் சீக்ரெட் ஆக வைத்திருந்த படக்குழு தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்... அமெரிக்காவில் கெத்து காட்டிய கமல்! காமிக்-கான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது ரசிகர்கள் உச்சாக வரவேற்பு!

அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் புராஜெக்ட் கே என்றால் என்பதை விவரிக்கும் வகையில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் கமல்ஹாசன், பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் உள்பட புராஜெக்ட் கே படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதன்படி ஹாலிவுட் தரத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த கிளிம்ப்ஸ் வீடியோ மூலம் புராஜெக்ட் கே என்றால் கல்கி என்பதை அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு கல்கி 2898AD என பெயரிடப்பட்டு உள்ளது.

இப்படத்தில் நடிகர் பசுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது கிளிம்ப்ஸ் வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. ஸ்டார் வார்ஸ் பாணியிலான காட்சி அமைப்புடன் ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோ பிரபாஸ் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் ஆக அமைந்தாலும், கமல் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் கமலை ஒரு செகண்ட் கூட காட்டாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

Kalki 2898 AD Glimpse | Prabhas | Amitabh Bachchan | Kamal Haasan | Deepika Padukone | Nag Ashwin

இதையும் படியுங்கள்... கிறிஸ்டோபர் நோலனுக்கு போட்டியாக களமிறங்கும் விஜய் ஆண்டனி... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்கள் இத்தனையா?