யம்மாடியோ.. இந்த வருஷம் மட்டும் 50 படங்களா! கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் அந்த நடிகர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரே ஆண்டில் 50 படங்களில் நடித்து பிசியான நடிகர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பிரபல நடிகரைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சினிமாவில் ஏராளமான நடிகர் நடிகைகள் அறிமுகமான வண்ணம் உள்ளனர். அப்படி வரும் அனைவருக்கும் சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே சினிமாவில் அதிர்ஷ்டம் கிடைக்கும். அந்த வகையில் சினிமாவில் தற்போது மச்சக்கார நடிகர் என்றால் அது காமெடி நடிகர் யோகிபாபு தான்.
லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து பின்னர் அமீரின் யோகி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் யோகிபாபு. பல்வேறு தடைகளை தாண்டி தனது கடின உழைப்பால் முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகிபாபு. வடிவேலு, சந்தானம் போன்ற நடிகர்கள் ஹீரோவாக நடிக்க கிளம்பிவிட்டதால், தமிழ் சினிமாவில் காமெடியனுக்கு பஞ்சம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் பார்முக்கு வந்த யோகிபாபு தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் கைவசம் உள்ள படங்களின் எண்ணிக்கையை கேட்டால் தலை சுற்றிப்போகும். அந்த வகையில் தற்போது மட்டும் இவர் கைவசம் 39 படங்கள் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை இவர் நடித்த 11 படங்கள் ரிலீசாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... மீண்டும் காதல் ரூட்டில் தனுஷ்...! அப்போ ஐஸ்வர்யா... இப்போ யார் கூட தெரியுமா?
தற்போது யோகிபாபு கைவசம் சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை 2, அடங்காதே, ஜகஜால கில்லாடி, அந்தகன், பிஸ்தா, காவி ஆவி நடுவுல தேவி, ஹரா, பூச்சாண்டி, சலூன், அயலான், காஃபி வித் காதல், வெள்ளை உலகம், தீயோருக்கு அஞ்சேல், டக்கர், சூரப்புலி, தமிழரசன், நானே வருவேன், ஜவான், காசேதான் கடவுளடா, தலை நகரம் 2, வாரிசு, மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள், ஜெயிலர், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களும், இதுதவிர பெயரிடப்படாத சில படங்களும் உள்ளன.
யோகிபாபுவுக்கு அடுத்த படியாக அதிக படங்களில் நடித்து வரும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். தற்போது இவர் கைவசமும் 10 படங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஜிவி பிரகாஷ், ராகவா லாரன்ஸ், சசிகுமார் ஆகியோர் அரை டஜன் படங்களை கைவசம் வைத்து இருக்கின்றனர். இதன்மூலம் பிசியான நடிகர்கள் லிஸ்டில் யோகிபாபு தான் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
இதையும் படியுங்கள்... மீண்டும் காதல் தோல்வியா..? யார் மேல இம்புட்டு கோபம்... நடிகை திரிஷா பதிவால் குழம்பிப்போன ரசிகர்கள்