மீண்டும் காதல் ரூட்டில் தனுஷ்...! அப்போ ஐஸ்வர்யா... இப்போ யார் கூட தெரியுமா?
Dhanush : நடிகர் தனுஷ் கைவசம் தமிழில் நானே வருவேன், கேப்டன் மில்லர், வடசென்னை 2, தெலுங்கில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன் 2 போன்ற படங்கள் உள்ளன.
நடிகர் தனுஷ் கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் ரிலீசான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மித்ரன் ஆர் ஜவகர் இயக்கிய இப்படத்தில் உணவு டெலிவரி செய்பவராக நடித்துள்ளாந் நடிகர் தனுஷ்.
இதைத் தொடர்ந்து இவர் கைவசம் தமிழில் நானே வருவேன், கேப்டன் மில்லர், வடசென்னை 2 போன்ற படங்கள் உள்ளன. அதேபோல் தெலுங்கில் வாத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதுதவிர ஹாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் தனுஷ்.
இதையும் படியுங்கள்... மீண்டும் காதல் தோல்வியா..? யார் மேல இம்புட்டு கோபம்... நடிகை திரிஷா பதிவால் குழம்பிப்போன ரசிகர்கள்
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் தனுஷுக்கு பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளனும் ஒரு காதல் கதையை சொல்லி உள்ளார். இந்த கதை நடிகர் தனுஷுக்கு மிகவும் பிடித்துப் போனதால் இப்படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த முழுநீள காதல் படம் என்றால் அது 3 தான்.
தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய அப்படத்தில் காதல் நாயகனாக வலம் வந்தார் தனுஷ். அப்படத்துக்கு பின்னர் முழு நீள காதல் படங்களில் நடிக்காமல் இருந்த வந்த தனுஷ் தற்போது மீண்டும் காதல் ரூட்டுக்குள் நுழைந்துள்ளார். தனுஷ் - இளன் இணையும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 51 வயதிலும் கிளாமர் உடையில் போட்டோஷூட்... இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு - வைரலாகும் கியூட் கிளிக்ஸ்