- Home
- Cinema
- 2025-ல் அதிக லாபத்தை அள்ளிக் கொடுத்து... தயாரிப்பாளர்களை உச்சி குளிர வைத்த டாப் 5 தமிழ் மூவீஸ் என்னென்ன?
2025-ல் அதிக லாபத்தை அள்ளிக் கொடுத்து... தயாரிப்பாளர்களை உச்சி குளிர வைத்த டாப் 5 தமிழ் மூவீஸ் என்னென்ன?
2025ம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில், இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபத்தை அள்ளிக்கொடுத்த டாப் 5 மூவீஸ் பற்றி பார்க்கலாம்.

Top 5 Most Profitable Tamil Movies in 2025
2025-ம் ஆண்டு தற்போது தான் தொடங்கியது போல் இருந்தது. ஆனால் அதற்குள் 11 மாதங்கள் கடகடவென ஓடிவிட்டன. தற்போது ஆண்டு இறுதிக்கு வந்துவிட்டோம். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல படங்கள் எதிர்பாரா ஹிட் அடித்ததோடு, வசூலையும் வாரிக் குவித்திருக்கின்றன. அந்த வகையில், 2025-ம் ஆண்டு வெளியான படங்களில் தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபத்தை அள்ளிக்கொடுத்த டாப் 5 தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டூரிஸ்ட் ஃபேமிலி
2025-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றியை ருசித்த படம் என்றால் அது டூரிஸ்ட் ஃபேமிலி தான். அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கிய இப்படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்த இப்படம் அடிதடி, அலப்பறை இன்றி குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஒரு ஃபீல் குட் படமாக இருந்தது. வெறும் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 90 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கொடுத்த படமாக மாறி உள்ளது.
மதகஜராஜா
இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படம் என்றால் அது மதகஜராஜா தான். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து சுமார் 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த இப்படம் 15 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது. ஆனால் இப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி 65 கோடி வசூலை வாரிக்குவித்தது. இதன்மூலம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபத்தை இப்படம் ஈட்டி தந்துள்ளது.
டிராகன்
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பிரம்மாண்ட வெற்றியை ருசித்த படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும் ஒன்று. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து கலந்த பக்கா பேக்கேஜ் ஆக இருந்ததால் தியேட்டரில் சக்கைப்போடு போட்ட இப்படம் 151 கோடி வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தின் பட்ஜெட் வெறும் 37 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவன் தலைவி
கோலிவுட் கொடுத்த மற்றுமொரு மாஸ் ஹிட் படம் தான் தலைவன் தலைவி. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இதில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், செம்பன் வினோத், ஆர்.கே.சுரேஷ், சரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் 25 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.
பைசன்
கோலிவுட்டில் இருந்து லேட்டஸ்டாக வந்த ஹிட் படம் தான் பைசன் காளமாடன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். பா.இரஞ்சித் தயாரித்த இப்படம் 30 கோடி பட்ஜெட்டில் தயாராகி பாக்ஸ் ஆபிஸில் 75 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டி மாஸ் ஹிட் அடித்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

