MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யாத்திசை முதல் குலசாமி வரை... ஏப்ரல் 21-ந் தேதி தியேட்டரில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீசா? - முழு லிஸ்ட் இதோ

யாத்திசை முதல் குலசாமி வரை... ஏப்ரல் 21-ந் தேதி தியேட்டரில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீசா? - முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி யாத்திசை என்கிற வரலாற்று படம், விமல் நடித்துள்ள இரண்டு படங்கள் உள்பட ஏராளமான படங்கள் ரிலீசாக உள்ளன.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 19 2023, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

யாத்திசை

பாண்டியர்களின் வீர வரலாற்றை பேசும் படமாக உருவாகி உள்ளது யாத்திசை. இப்படத்தை தரணி ராஜேந்திரன் இயக்கி உள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை ரூ.10 கோடி செலவில் பிரம்மாண்டமாக படமாக்கி உள்ளனர். இப்படமும் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

யானை முகத்தான்

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள யானை முகத்தான் திரைப்படமும் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பேண்டஸி காமெடி திரைப்படமான இதை ரெஜிஷ் மிதிலா இயக்கி உள்ளார். இப்படத்தில் யோகிபாபு உடன் ஊர்வசி, ரமேஷ் திலக், கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

35

தெய்வ மச்சான்

விமல் ஹீரோவாக நடித்துள்ள தெய்வ மச்சான் திரைப்படமும் இந்த வாரம் ரிலீஸாக உள்ளது. மார்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத், நடிகர் விமலின் தங்கையாக நடித்துள்ளார். இதுதவிர பாண்டியராஜன், பால சரவணன், ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Watch : ஆரம்பிக்கலாங்களா... BMW பைக்கில் உலக சுற்றுலாவை தொடங்கி கெத்துகாட்டும் அஜித் - மாஸ் வீடியோ இதோ

45

தமிழரசன்

விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள தமிழரசன் என்கிற ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமும் ஏப்ரல் 21-ந் தேதி திரை காண உள்ளது. ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

55

குலசாமி

விமல் நடித்துள்ள குலசாமி திரைப்படமும் ஏப்ரல் 21-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. புதுமுக இயக்குனர் சரவணன் சக்தி இயக்கியுள்ள இப்படத்தில் தான்யா ஹோப் நாயகியாக நடித்துள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்தில் போஸ் வெங்கட், வினோதினி, மகாநதி சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... 'ருத்ரன்' பட வெற்றியை... முதியோர் இல்லத்தில் உதவி செய்து கொண்டாடிய இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved