சோழர்களின் பொன்னியின் செல்வனுக்கு டஃப் கொடுத்த பாண்டியர்களின் ‘யாத்திசை’ படம் இப்போ ஓடிடிக்கு வந்தாச்சு
தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற யாத்திசை திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது.
வரலாற்று படங்களை சிறிய பட்ஜெட்டில் எடுத்து வெற்றிகாணலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த திரைப்படம் தான் யாத்திசை. தரணி ராஜேந்திரன் என்கிற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் பிரம்மாண்டத்திற்கு துளியும் குறைவைக்காமல் உருவான சிறு பட்ஜெட் படமான யாத்திசை கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பாண்டியர்களின் வீரதீர வரலாற்றை பேசும் சரித்திர படமாக யாத்திசை உருவாகி இருந்தது.
ரணதீரன் என்கிற பாண்டிய மன்னனுக்கும், எயினர்களுக்கும் இடையேயான போரை மையமாக வைத்து தான் யாத்திசை படத்தை எடுத்திருந்தார் இயக்குனர் தரணி ராஜேந்திரன். பொதுவாக வரலாற்று படம் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.50 கோடியாவது செலவாகும் என கூறுவார்கள். ஆனால் வெறும் 10 கோடி பட்ஜெட்டில் தரமான வரலாற்று படத்தை எடுக்கலாம் என்பதை யாத்திசை மூலம் செய்து காட்டி உள்ளார் இயக்குனர் தரணி ராஜேந்திரன்.
இதையும் படியுங்கள்... மாநாடு போல் மாஸ் காட்டினாரா வெங்கட் பிரபு?... கஸ்டடி படம் எப்படி இருக்கிறது? - முழு விமர்சனம் இதோ
யாத்திசை திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்ததை போல் வசூல் ரீதியாகவும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் மணிரதனத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தால் யாத்திசை படத்திற்கு சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொன்னியின் செல்வனுக்கு டஃப் கொடுத்து அதன் ரிலீசுக்கு பின்னரும் கணிசமான திரையரங்குகளில் வெற்றிநடை போட்டது யாத்திசை.
இந்த யாத்திசை திரைப்படத்தை திரையரங்குகளில் மிஸ் பண்ணிய ரசிகர்களுக்கு தற்போது ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், யாத்திசை திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன்படி இப்படம் இன்று (மே 12) முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால் இனி வீட்டில் இருந்தபடியே இந்த சிறு பட்ஜெட் பிரம்மாண்ட படத்தை பார்க்க முடியும். இப்படம் ஓடிடியிலும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்துக்காக மிகவும் கம்மி சம்பளம் வாங்கிய அனிருத் - காரணம் என்ன?