அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்துக்காக மிகவும் கம்மி சம்பளம் வாங்கிய அனிருத் - காரணம் என்ன?
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் மிகவும் கம்மி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தற்போது பான் இந்தியா இசையமைப்பாளராகவும் உருவெடுத்து வருகிறார். அனிருத் கைவசம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஜூனியர் என்.டி.ஆர் படம் மற்றும் இந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தமிழிலும் இவர் கைவசம் முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
அந்த வகையில் தமிழில் ரஜினியின் ஜெயிலர் மற்றும் தலைவர் 171, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ, மகிழ் திருமேனி - அஜித் கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி. ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பான இந்தியன் 2 என அனிருத்தின் காட்டில் பட மழை பொழிந்து வருகிறது. அந்த அளவுக்கு மிகவும் டிமாண்ட் ஆன இசையமைப்பாளராக அனிருத் இருந்து வருகிறார். தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை கொடுத்து வரும் அனிருத் கடந்தாண்டு தான் தன் சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியாக தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள்... 1500 ரூபாய்க்கு IPL டிக்கெட் வாங்கி.. 6500க்கு நடிகையுடன் சேர்ந்து பிளாக்கில் விற்ற விஜய் டிவி நாஞ்சில் விஜயன்
இந்நிலையில், அஜித் நடிப்பில் உருவாக உள்ள விடா முயற்சி படத்திற்காக அனிருத் வாங்கி உள்ள சம்பளம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி விடாமுயற்சிக்காக அனிருத் ரூ.5 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்திய பின்னர் அனிருத் ஏன் அஜித் படத்திற்காக மட்டும் ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார் என்கிற கேள்வியை தான் பலரும் எழுப்பி வருகின்றனர்.
அதன் காரணம் என்னவென்றால், அனிருத் விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளராக கமிட் ஆனது கடந்தாண்டு மார்ச் மாதம். அதுவரை அவர் ரூ.5 கோடி தான் சம்பளமாக வாங்கி வந்துள்ளார். அதன்பின்னர் தான் அவரது இசையில் பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என தொடர்ந்து பல்வேறு பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகி அதன் பாடல்களும் வேறலெவலில் ஹிட் அடித்தன. அந்த படங்களின் தொடர் வெற்றியின் காரணமாக தான் அனிருத் தன் சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிரபல நடன இயக்குநர் ஷெரீஃப்பின் புதிய முயற்சியாக உருவான ஜூபாப் நடன- உடற்பயிற்சி செயலி! துவக்கி வைத்த கமல்!