- Home
- Cinema
- பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் பாண்டியர்கள்... யாத்திசை படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?
பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் பாண்டியர்கள்... யாத்திசை படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?
தரணி ராஜேந்திரன் என்கிற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் யாத்திசை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

வரலாற்று படங்கள் என்றாலே பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டால் தான் ஹிட் ஆகும் என்கிற பார்முலாவை தகர்த்தெறிந்த திரைப்படம் தான் யாத்திசை. பெரும்பாலும் இளம் நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்து சரித்திர படத்துக்கு உண்டான பிரம்மாண்டத்திற்கு துளியும் குறைவைக்காமல் உருவான சிறுபட்ஜெட் திரைப்படம் தான் யாத்திசை. இப்படத்தை தரணி ராஜேந்திரன் என்கிற புதுமுக இயக்குனர் தான் இயக்கி உள்ளார்.
பாண்டியர்களின் வீரதீர வரலாற்றை பேசும்படமாக யாத்திசையை எடுத்துள்ளார் தரணி ராஜேந்திரன். குறிப்பாக ரணதீரன் என்கிற பாண்டிய மன்னனுக்கும் எயினர்களுக்கும் இடையேயான யுத்தத்தை மையமாக வைத்து தான் இந்த திரைக்காவியத்தை எடுத்துள்ளனர். இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இப்படத்தை வெறும் ரூ.10 கோடி பட்ஜெட்டுக்குள் எடுத்து முடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஐடி ரெய்டால் மாவீரன் படத்துக்கு சிக்கல்... ஜி ஸ்கொயருக்கும் சிவகார்த்திகேயன் படத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
ரிலீசுக்கு முன்பே டீசர், டிரைலர்கள் வெளியாகி யாத்திசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்ததால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவே படமும் அமைந்திருந்தது. கடந்த ஏப்ரல் 21-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசான யாத்திசை திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
ரசிகர்களின் அமோக வரவேற்பால் யாத்திசை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி முதல் நாளில் ரூ. 37 லட்சம் வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் 50 லட்சம், மூன்றாம் நாளில் 80 லட்சம் என தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்தது. இப்படம் 4 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... 23 வருடமானாலும் குறையாத காதல்! அஜித் கன்னத்தோடு கன்னம் வைத்து கட்டிபிடித்த.. கியூட் போட்டோவை பகிர்ந்த ஷாலினி!