23 வருடமானாலும் குறையாத காதல்! அஜித் கன்னத்தோடு கன்னம் வைத்து கட்டிபிடித்த.. கியூட் போட்டோவை பகிர்ந்த ஷாலினி!
அஜித் - ஷாலினிக்கு திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகும் நிலையில், சற்று முன் கணவர் அஜித்தின் கன்னத்தோடு கன்னம் வைத்திருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு காதலை வெளிப்படுத்தியுள்ளார் ஷாலினி.
திரையுலகில் நடிகர் - நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கூட... தங்களின் வாழ்நாள் முழுவதும் அதே காதலோடு இருக்கிறார்களா என்றால் அது சந்தேகமே. பலர் திருமணமான சில வருடங்களிலே தங்களின் திருமணம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களை அணுகுவதை பார்த்திருக்கிறோம்.
ஆனால் காதலித்து திருமணம் செய்து கொண்டதில் இருந்து, மிகவும் அன்யோன்யமான ஜோடியாக இருக்கும் நட்சத்திர தம்பதிகள் எப்போதுமே ஸ்பெஷலாகவே பார்க்கப்படுகிறார்கள். அப்படி தமிழ் திரையுலகை பொறுத்தவரை, அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா, குஷ்பு - சுந்தர், ப்ரீதா - ஹரி போன்ற சிலர் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ளனர்.
இந்த ஸ்பெஷல் ஜோடிகள் லிஸ்டில் உள்ள எஸ்ட்ராங் ஸ்பெஷல்... அமர்க்களமான ஜோடி என்றால் அது அஜித் - ஷாலினி தான். 'அமர்க்களம்' படத்தில் ஒன்றாக நடித்த போது , இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல் பின் திருமணத்தில் முடிந்தது. அஜித் குடும்பத்தில் அவருடைய காதலுக்கு உடனே பச்சை கொடி காட்டிவிட்டாலும், ஷாலினி குடும்பத்தில் அவ்வளவு எளிதில் சம்மதிக்கவில்லையாம். பல பிரச்சனைகளுக்கு பின்பு தான் ஒருவழியாக திருமணத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டு இதே நாளில் தங்களின் காதல் வாழ்க்கையை அடுத்து, திருமண வாழ்க்கையிலும் இணைந்தனர் அஜித் - ஷாலினி. இவர்களின் காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.
திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆனாலும் அஜித் - ஷாலினிக்குள் காதல் என்பது... இன்னும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. சமீபத்தில் ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நிலையில் அவ்வப்போது சில அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் தற்போது, தன்னுடைய 23 ஆம் ஆண்டு திருமணம் நாளை முன்னிட்டு... காதல் கணவர் அஜித் கன்னத்துடன் கன்னம் வைத்து, இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டிருக்கும் கியூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட, இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை தாறுமாறாக குவித்து வருகிறது.