ராம் சரண் மனைவி உபாசனாவுக்கு நடந்த வளைகாப்பு! பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து.. வைரலாகும் போட்டோஸ்!
நடிகர் ராம் சரண் மனுவை உபாசனா காமினேனி கொனிடேலாவுக்கு குடும்பத்தினர் முன்னிலையில்... வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளதை தொடர்ந்து, இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண், சிறுத்த என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதால், திரைப்படங்களின் கதைகளில் அதிக கவனம் செலுத்தி தேர்வு செய்ய துவங்கினார். அந்த வகையில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த 'மகதீரா' திரைப்படம் தாறுமாறு ஹிட் அடித்தது.
தெலுங்கு திரையுலகை தாண்டி தமிழிலும், டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் இங்கும் வசூலில் மாஸ் காட்டியது. தந்தை ஒரு, சூப்பர் ஸ்டார் என்றாலும்... ராம் சரண் தெலுங்கு திரையுலகில் தனக்கான பாதையை உருவாக்கி அதில் வெற்றிநடை போட்டு வருகிறார்.
இவர் திரையுலகில் அறிமுகமாகி 16 வருடங்கள் ஆகும் நிலையில், இதுவரை 16 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார். குறிப்பாக கடந்த ஆண்டு, இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளியான 'RRR' திரைப்படம் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.
அதே போல் இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்று... இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது. மேலும்,இந்த படத்திற் தொடர்ந்து தற்போது ராம் சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்.. 'RC 16' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ராம் சரண் மனைவி உபாஸனாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
ராம் சரண், கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், சமீபத்தில் தான் உபாசனா கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் உபாசனாவுக்கு துபாயில் ராம் சரண் வளைகாப்பு விழா நடத்தி அழகு பார்த்துள்ளார். இந்த விழாவில், இரு தரப்பினரின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக பிங்கி ரெட்டி, சானியா மிர்சா, கனிகா கபூர், அல்லு அர்ஜுன், ராம் சரணின் பெற்றோர்களான சிரஞ்சீவி மற்றும் சுரேகா கொனிடேலா, அவரின் சகோதரிகளான சுஷ்மிதா மற்றும் ஸ்ரீஜா, உபாசனாவின் தாயார் சோபனா காமினேனி, சங்கீதா ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உபாசனா காமினேனி கொனிடேலா ஒரு பிங்க் வண்ண உடையில்... தளர்வான ஸ்டைலில் ஜொலிக்க... ராம் சரண் கருப்பு வண்ண உடையில் ஸ்மார்ட் சினோஸ் எனப்படும் வெள்ளை சட்டையிலும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
இந்த பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு அனைவரும் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ராம் சரணும் உபாசனாவும் கடந்த சில காலமாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர்களாக இருந்து வரும் நிலையில், இந்த புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை மழை போல் பொழிந்து வருகிறார்கள்.