ஐடி ரெய்டால் மாவீரன் படத்துக்கு சிக்கல்... ஜி ஸ்கொயருக்கும் சிவகார்த்திகேயன் படத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஜி ஸ்கொயர் அலுவலகங்களில் இரண்டு நாட்களாக ஐடி ரெய்டு நடைபெற்று வருவதால் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் வில்லனாக நடிகர் மிஷ்கின் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, சுனில், சரிதா ஆகியோர் நடித்திருக்கின்றனர். மாவீரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.
மாவீரன் படத்தை மலைபோல் நம்பி உள்ளார் சிவகார்த்திகேயன். ஏனெனில், அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் படு தோல்வியை சந்தித்ததால், மாவீரன் படம் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார். மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்து இருந்தனர்.
இதையும் படியுங்கள்... 23 வருடமானாலும் குறையாத காதல்! அஜித் கன்னத்தோடு கன்னம் வைத்து கட்டிபிடித்த.. கியூட் போட்டோவை பகிர்ந்த ஷாலினி!
maaveeran
ரிலீஸ் தேதி அறிவித்த மறுநாளே அப்படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் ஐடி ரெய்டு நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அந்நிறுவனத்தில் இன்று இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. இதில் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐடி ரெய்டில் சிக்கியுள்ள ஜி ஸ்கொயருக்கும், மாவீரன் படத்துக்கும் தொடர்பு இருப்பது தான் இந்த சிக்கலுக்கு காரணம். மாவீரன் படத்தை அருண் விஸ்வா என்பவர் தான் தயாரித்து வருகிறார். அவர் ஜி ஸ்கொயரில் பண உதவி பெற்று தான் மாவீரன் படத்தை தயாரித்து உள்ளாராம். தற்போது நடைபெற்று வரும் ஐடி ரெய்டில் இது தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் சிக்கினால், மாவீரன் படத்தின் மீதும் வருமான வரித்துறையினரின் பார்வை திரும்பும் சூழல் உருவாகி உள்ளது.
இதனால் மாவீரன் படத்துக்கு ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் சிவகார்த்திகேயனும், படக்குழுவும் உள்ளார்களாம். ரிலீஸ் தேதி அறிவித்த உடன் மாவீரன் படத்துக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்களும் அப்செட் ஆகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... குந்தவையின் கியூட்னஸை ரசிக்க 2 கண்கள் போதாது.! ரசிகர்களை பெருமூச்சு விடவைத்த த்ரிஷா.. PS2 ப்ரோமோஷன் போட்டோஸ்!