80-வது மணிவிழாவிற்கு விஜய் வராததற்கு இது தான் காரணம்! எஸ்.ஏ.சி சொல்றது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் பட்டியலில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் (vijay) , அண்மையில் நடந்த தன்னுடைய பெற்றோரின் 80-வது மணிவிழாவில் கலந்து கொள்ளாததற்கு நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்த நிலையில், எஸ்.ஏ.சி விஜய் கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சமீபத்தில் தன்னுடைய 80-வது பிறந்தநாளை யாரும் இல்லாமல், மனைவியுடன் மட்டுமே எஸ்.ஏ.சி கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், இவரது மணிவிழாவிலும் விஜய், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என யாரும் கலந்துகொள்ளவில்லை.
எஸ்.ஏ.சி - ஷோபா தம்பதியின் ஒரே மகனான விஜய், இவர்களது மணிவிழாவில் கலந்து கொள்ளாதது... சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியது.
மேலும் செய்திகள்: சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!
நெட்டிசன்கள் பலர், பிள்ளைகள் கூட இருந்து செய்ய வேண்டிய நற்காரியங்களை, ஒரே மகனாக இருந்தும் விஜய் செய்ய தவறி விட்டதாக தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். படத்தில் மட்டும் பாச மழை பொழியும் விஜய் ஏன், இந்த விசேஷத்தில் கலந்துகொள்ள வில்லை என்கிற கேள்விகளும் எழுந்தது.
இந்நிலையில் தன்னுடைய மகன் விஜய் ஏன் தங்களுடைய 80-வது மணிவிழாவில் கலந்து கொள்ளவில்லை என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
மேலும் செய்திகள்: கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?
தன்னுடைய மகன் விஜய்க்கு ஐதராபாத்தில் ஜூலை 2-ம் தேதி ஷூட்டிங் இருந்த காரணத்தால் 1-ம் தேதியே கிளம்பி சென்று விட்டார் இதன் காரணமாகவே அவர் கலந்து கொள்ள வில்லை என தெரிவித்தார்.
இவர் கூறும் காரணமெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என... நெட்டிசன்கள் மீண்டும் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர். விஜய் ஒரு முன்னணி நடிகராக இருக்கும் பட்சத்தில் அவரது கால்ஷீட்டை அவரே மற்ற முடியும். அதிலும் ஒரு நாள் தாமதம் ஆனால் படக்குழு என்ன சொல்லிவிட போகிறது என ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: மனசுல அஞ்சலி பாப்பானு நினைப்போ... தம்மாத்துண்டு கவுனில் ஊர் சுற்றும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்!!
அதே போல்... மற்றொரு தரப்பினரோ, விஜய் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டு இவர்களது மணிவிழாவை சிறப்பித்திருக்கலாம். ஏன் அவர்களும் இதில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். இப்படி பல கேள்விகள் எழுவதால்... எஸ்.ஏ.சி சொல்வதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? நீங்களே யோசித்து உங்கள் கருத்தை கூறுங்கள்.