- Home
- Cinema
- அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி உறுதியாகியும்... ஏகே 62 படத்தின் அறிவிப்பு தாமதம் ஆவது ஏன்?
அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி உறுதியாகியும்... ஏகே 62 படத்தின் அறிவிப்பு தாமதம் ஆவது ஏன்?
ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியான போதும் அப்படத்திற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிடாமல் உள்ளது ஏன் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் நடித்த துணிவு படம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் சக்கைப்போடு போட்டுவருகிறது. இதுஒருபுறம் இருக்க அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 குறித்து தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பின்னர் திடீரெனெ அவரை நீக்கிவிட்டு இயக்குனர் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தனர். அவர் இயக்குவது உறுதியான போதும் ஏகே 62 குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடாமல் உள்ளனர்.
அறிவிப்பு தாமதம் ஆவதற்கான காரணம் குறித்து புதிய தகவல் கோலிவுட்டில் உலாவருகிறது. அது என்னவென்றால், நடிகர் அஜித், மகிழ் திருமேனியிடம் திடீரென கதை கேட்டதும், அவர் தான் ஏற்கனவே விஜய்க்கு சொன்ன மூன்று கதைகளை தான் அஜித்துக்கு சொல்லியுள்ளார். இதில் ஒரு கதையை தான் அஜித் தேர்ந்தெடுத்து உள்ளாராம். விஜய்க்காக மகிழ் திருமேனி ரெடி பண்ணிய அந்த கதையை அஜித்துக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யுமாறு லைகா தரப்பும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... வாத்தி முதல் ஓ மை கோஸ்ட் வரை... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் ஒரு பார்வை
அதற்கான வேலைகள் தான் தற்போது நடந்து வருகிறதாம். அஜித்துக்கு ஏற்றார் போல் அந்தக் கதையில் சில் மாற்றங்களை செய்யும் பணியில் இயக்குனர் மகிழ் திருமேனி மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்திற்கு அந்த பணிகளை முடித்து மார்ச் மாதம் முதல் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். அதோடு அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வும் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அஜித்தின் ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுவென முடித்து வருகிற தீபாவளி பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டுவர வேண்டும் என்கிற முடிவில் லைகா நிறுவனம் உறுதியாக உள்ளதாம். அதெல்லாம் திட்டமிட்டபடி நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... அட்லீ செய்த செயல்.. செம்ம கோபத்தில் ஷாருக்கான்? இது தான் காரணமா..!