அட்லீ செய்த செயல்.. செம்ம கோபத்தில் ஷாருக்கான்? இது தான் காரணமா..!
அட்லீ செய்த செயலால் பாலிவுட் கிங் காங் ஷாருக்கான், அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய முதல் படத்திலேயே திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்தவர் அட்லீ. இவர் தமிழில் முதல் முதலில் இயக்கிய 'ராஜா ராணி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்தடுத்து தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில், என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார்.
விஜய்யை அடுத்து யாரை வைத்து அட்லீ படம் இயக்குவார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பாலிவுட் திரையுலகின் பக்கம் சாய்ந்த அட்லீ தற்போது நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஷாருக்கான் ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் முக்கிய வில்லனாக விஜய் சேதுபதியும், காமெடி வேடத்தில் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத், 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் மிகவும் விறுவிறுப்பாக மாற்றி உள்ளனர் படக்குழுவினர்.
மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது விஜய் 'லியோ' படத்தின் சூட்டிங் பிஸியாக உள்ளதால், முதலில் 'ஜவான்' படத்தில் ஒப்புக்கொண்ட விஜய், பின்னர் அதில் இருந்து பின்வாங்கியதாகவும் சில தகவல்கள் வெளியாகின. எனவே இந்த கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அட்லீ திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியது.
தற்போது வரை கேமியோ ரோலில் யார் உறுதியாக நடிக்கிறார் என்பது, தெரியாத நிலையில்... மற்றொரு பரபரப்பு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் படத்தை, ஷாருகான் மனைவி கௌரி கான் தான் தயாரித்து வருகிறார்.
இப்படத்திற்கு பட்ஜெட் போட்டதை விட, பல கோடி பணத்தை அட்லீ அதிகமாக செலவு செய்துள்ளதால் அவர் மீது ஷாருக்கான் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அப்செட்டில் இருக்கும் அட்லீ சென்னைக்கு வந்து, தன்னுடைய மனஉளைச்சலை வெளிப்படுத்தி வருவதாக சில தகவல்கள் கசிந்து கொண்டிருந்தாலும், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.