சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் விஜய்; அதன் விலை இத்தனை கோடியா?
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கிறார். அதன் விலை என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Thalapathy Vijay Private Jet Price : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜன நாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
அரசியலில் பிசியாகும் விஜய்
ஜன நாயகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படம். இப்படத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, தேர்தலுக்கு ஆயத்தமாக வருகிறார் விஜய். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி போட்டியிட உள்ளது.
கொடைக்கானலில் ஜனநாயகன் ஷூட்டிங்
நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு பின்னர் அவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருவதால் அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த மாதம் விஜய் கோவை வந்தபோது கோவையே ஸ்தம்பித்துப் போனது. இதையடுத்து ஜன நாயகன் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்ற விஜய், மதுரைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து காரில் கொடைக்கானல் கிளம்பி சென்றார். அப்போது மதுரை முதல் கொடைக்கானல் வரை வழிநெடுகிலும் விஜய்யை வரவேற்க ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.
விஜய்யின் பிரைவேட் ஜெட் விலை
நடிகர் விஜய் மதுரைக்கு தன்னுடைய பிரைவேட் ஜெட்டில் தான் வந்திருந்தார். அந்த ஜெட்டின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் வைத்திருக்கும் பிரைவேட் ஜெட்டின் விலை ரூ.8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் சொந்தமாக விமானம் வைத்திருக்கும் பிரபலங்கள் வெகு சிலரே, அதில் விஜய்யும் ஒருவர். கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் திகழ்ந்து வருகிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.275 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.