கொடைக்கானலில் பிளாஷ்பேக் காட்சி – மழையால் ஜன நாயகன் படப்பிடிப்பு நிறுத்தம்!
Thalapathy Vijay Jana Nayagan Movie Kodaikanal Shooting : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜன நாயகன்
Thalapathy Vijay Jana Nayagan Shooting : விஜய் அரசியலுக்கு வந்ததைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்படி இப்போது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, பாபா பாஸ்கர், மோனிஷா பைஜூ, வரலட்சுமி சரத்குமார், பிரியாமணி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
தளபதி விஜய்
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி ஜன நாயகன் படம் உருவாகி வருகிறது. வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
கொடைக்கானலில் படப்பிடிப்பு
சென்னையை சுற்றிலும் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மதுரைக்கு விமானம் மூலமாக வருகை தந்தார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடினர். மேலும், விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக கொடைக்கானலுக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போதும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவரது காரை பின் தொடர்ந்தே சென்றனர்.
தாண்டிக்குடி பகுதியில் 4 நாட்கள் தங்கும் விஜய்
இது ஒருபுறம் இருக்க கொடைக்கானலில் தாண்டிக்குடி பகுதியில் 4 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கொடைக்கானலில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு விஜய் வரும் 5ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
ராப் பாடல் - ஹனுமன்கிண்ட்
இந்தப் படத்தில் ராப் பாடல் ஒன்றை பிரபல ராப் பாடகர் ஹனுமன்கிண்ட் பாடியிருக்கிறார். இது குறித்து அவரே கூறியிருக்கிறார். அதில், விஜய்க்காக ஜன நாயகன் படத்தில் அனிருத் இசையில் சூப்பரான ராப் பாடல் ஒன்றை பாடியிருப்பதாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.