கூலி படத்தில் மிரட்டிய நடிகை.. யார் இந்த ரச்சிதா ராம்?
ரஜினியின் 'கூலி' படத்தில் கல்யாணி என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் நடிகை ரச்சிதா ராம். யார் இந்த நடிகை என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அவர் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

ரச்சிதா ராம்
கன்னட சினிமாவில் தனது திறமையால் ரசிகர்களின் இதயங்களை கைப்பற்றிய ரச்சிதா ராம், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய கூலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து ஒரே நாளில் ட்ரெண்டாகி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிய கூலி படம் ரச்சிதாவுக்கு நல்ல வரவேற்பை அள்ளித்தந்துள்ளது.
ரச்சிதா ராம் வாழ்க்கை
கூலியில் கல்யாணி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசர வைத்துள்ளார். யார் இந்த ரச்சிதா என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அவர் யார் என்பதை பார்க்கலாம். நடிகை ரச்சிதா ராம், “டிம்பிள் குயின்” எனக் கன்னட சினிமாவில் அழைக்கப்படுகிறார். இவர் 1992 அக்டோபர் 3-ல் பெங்களூரில் பிறந்தார்.
ராட்சிதா ராம் கரியர்
ரச்சிதாவின் தந்தை கே.எஸ். ராம் பாரதநாட்டிய கலைஞர் ஆவார். ரச்சிதா 2011-ல் Benkiyalli Aralida Hoovu என்ற டெலிவிஷன் தொடரில் அறிமுகமானார். 2013-ல் புல் புல் என்ற படத்துடன் திரையில் அறிமுகமான இவர், தற்போது 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், பாரதநாட்டியத்தில் பயிற்சி பெற்று 50க்கும் மேற்பட்ட மேடைகளில் நடனக் கலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ரச்சிதா ராம் நடித்துள்ள படங்கள்
கன்னட சினிமாவில் ரங்கீலா, ரன்னா, சக்ரவ்யுஹா, சீதாராம கல்யாண போன்ற படங்களில் ரச்சிதா சிறப்பான நடிப்பில் நடித்துள்ளார். இவர் உபேந்திரா, தர்ஷன், கணேஷ், கிச்சா சுதீப், புனீத்ராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் படத்தில் இணைந்துள்ளார். கூலி படம் ரச்சிதாவின் கோலிவுட்டில் முதல் படமாகும்.
கூலி நடிகை
கூலி படத்தில் காலீஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும், இயக்குனருமான உபேந்திராவுடன் ஐ லவ் யூ படத்தில் இணைந்து நடித்துள்ளார் நடிகை ரச்சிதா ராம். கூலி படத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ஆமிர்கான், சௌபின் ஆகிய பெரும் நட்சத்திரங்களுடன் கதையின் முக்கிய அங்கமாக மாறி ட்ரெண்டாகி வருகிறார் ரச்சிதா ராம். இன்னும் பல புதிய படங்களில் நடிக்க கமிட் ஆவார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.