கூலி vs வார் 2 : ரேஸில் முந்துவது யார்? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ
ஆகஸ்ட் 14 அன்று வெளியான ரஜினியின் கூலி மற்றும் ஹிருத்திக் - ஜூனியர் என்டிஆர் நடித்த வார் 2 பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டியில் உள்ளன. முதல் 3 நாட்களில் இரு படங்கள் செய்த வசூலை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கூலி வார் 2 வசூல்
ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியான ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஹிருத்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆர் நடித்த வார் 2, பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது.
ஹிருத்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆர்
கூலி திரைப்படம் மாஃபியா ஆக்ஷன் திரில்லர் படம் 65 கோடி வசூலித்து சாதனை படைத்தது. ஆனால் எதிர்பார்த்தபடி இரண்டாம் நாளில் உயரவில்லை. மாறாக குறைந்து 54.75 கோடியாக முடிந்தது. மூன்றாம் நாள் வசூல் மேலும் சரிந்து 38 கோடியாக மட்டுமே இருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி
இருந்தாலும், மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் கூலி 158 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வார் 2 படம் ஆனது ஹிருத்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆர் நடித்த இந்த ஸ்பை ஆக்ஷன் படம், இரண்டாம் நாளில் 57.35 கோடி வரை வசூல் செய்தது. மூன்றாம் நாள் (ஆகஸ்ட் 16, சனிக்கிழமை) வசூல் திடீரென சரிந்து 33.25 கோடியாக மட்டுமே இருந்தது.
கூலி வசூல் நிலவரம்
இதன் மூலம், மூன்று நாட்களில் வார 2 இந்தியாவில் 142.6 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்றாம் நாளின் முடிவில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ரஜினியின் கூலி 300 கோடி உலகளவில் கடந்துள்ளது. அதேசமயம், யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த வார 2 உலகளவில் 200 கோடி வசூல் பின்தொடர்கிறது.