- Home
- Cinema
- கலாநிதி மாறன் கொடுத்த பிரஷரால் சொதப்பிய லோகேஷ் கனகராஜ்..? ரஜினி அப்பவே சொன்னாரே நோட் பண்ணீங்களா!
கலாநிதி மாறன் கொடுத்த பிரஷரால் சொதப்பிய லோகேஷ் கனகராஜ்..? ரஜினி அப்பவே சொன்னாரே நோட் பண்ணீங்களா!
கூலி படம் சொதப்பியதற்கு கலாநிதி மாறனும் ஒரு காரணம் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதன் பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Netizens Slams Kalanithi Maran
ரஜினிகாந்த் நடிப்பில் 300 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்து இருந்தார். இதற்கு முன்னர் இவர்கள் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால், கூலி படம் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை அப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் ரிலீஸ் ஆன முதல் நாளே அதன்மீது நெகடிவ் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இதனால் முதல் நாளைக் காட்டிலும் இரண்டாம் நாளில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சரிந்துள்ளது.
கூலி படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகள்
கூலி படத்தின் மைனஸே அதில் உள்ள எக்கச்சக்கமான லாஜிக் ஓட்டைகள் தான். தயாளுடைய மனைவி தான் கல்யாணி என்பது தெரிந்தே ஸ்ருதிஹாசன் அவருடன் செல்வது ஏன்?. தன் சிண்டிகேட் ஆளையே ரஜினி கொலை செய்தும், அவரை பார்த்ததும் அமீர்கான் பம்முவது. ஸ்ருதிஹாசனுக்கு மட்டுமே ஆபரேட் பண்ண தெரிந்த மிஷினை கல்யாணியாக நடித்துள்ள ரச்சிதா ராம், சார்லியை கொலை செய்ய பயன்படுத்துவது என இப்படத்தில் உள்ள லாஜிக் மிஸ்டேக்குகளை எடுத்துப் பார்த்தால் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். லோகேஷா இப்படி ஒரு படம் எடுத்துள்ளார் என பலரும் கேட்கும் அளவுக்கு தான் கூலி உள்ளது.
கூலி சொதப்பியதற்கு கலாநிதி மாறன் தான் காரணமா?
கூலி படத்தின் திரைக்கதை சொதப்பியதாக பல விமர்சகர்கள் கூறினாலும், இப்படத்தில் லோகேஷுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமும் இதன் தோல்விக்கு ஒரு காரணமாக நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர். இப்படத்தின் ஆடியோ லாஞ்சிலேயே ரஜினிகாந்த் பேசுகையில், லோகேஷ் என்ன பண்ணுவீங்களோ தெரியாது, கன்னடால, தெலுங்குல பான் இந்தியா ஹிட் கொடுத்துட்டாங்க. இந்த படத்தை எப்படியாச்சும் பான் இந்தியா அளவுல ஹிட் ஆக்கீடுங்கனு கலாநிதி மாறன் சொன்னதாக ரஜினி கூறி இருப்பார். அவர் பான் இந்தியா ஹிட் கொடுக்க வேண்டும் என கொடுத்த அழுத்தத்தால் தான் இப்படத்தில் தேவையே இல்லாத அமீர்கான் கேமியோ ஆகியவை சேர்க்கப்பட்டதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Correct 💯
In audio launch also kalanithi maran said he want pan India movie. So loki tried this movie 🤦— Charan raj (@Charanrj0987654) August 15, 2025
#Coolie Strictly Below Average👎👎. It seems Kalanithi Maran pushed Lokesh into making this film, which he was not really interested in. The second half is a complete disaster and the star cast feels like they just showed up rather than backing a strong story.(1/2)
— guru (@gurjiiii) August 14, 2025
Sun pictures and Rajini to Loki -> I need Jailer in Loki style with Pan India actors
— Redman (@redmanDgr8) August 15, 2025
ஜெயிலர் vs கூலி
அதேபோல் கூலி படத்தை ஜெயிலர் பட பார்மெட்டில் எடுக்க வேண்டும் என்கிற அழுத்தமும் லோகேஷுக்கு இருந்துள்ளது படத்தை பார்க்கும்போதே தெரிந்தது. வழக்கமாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படத்தில் ஐட்டம் சாங் வைக்கும் ஆள் கிடையாது. அப்படி இருக்கையில் மோனிகா பாடல், ஏன் வைக்கப்பட்டது என்கிற கேள்விக்கு அது படத்தின் பிசினஸுக்காக மட்டுமே வைத்ததாக லோகி பேட்டியில் கூறி இருந்தார். அதனால் அதுவும் தயாரிப்பு தரப்பில் காவாலா போன்று ஒரு பாடலை கேட்டதால் வைக்கப்பட்டதாக தெரிகிறது. அதேபோல் ஜெயில் படத்தில் இடம்பெற்ற பான் இந்தியா நட்சத்திரங்கள் போல் இதிலும் நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ். ஆனால் அது கிளிக் ஆகவில்லை.