MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரெக்கார்டு மேக்கர் அண்ட் ரெக்கார்டு பிரேக்கர்: கூலி முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

ரெக்கார்டு மேக்கர் அண்ட் ரெக்கார்டு பிரேக்கர்: கூலி முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான "கூலி" திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Aug 15 2025, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரஜினிகாந்த் கூலி முதல் நாள் வசூல்
Image Credit : X / Sun pictures

ரஜினிகாந்த் கூலி முதல் நாள் வசூல்

இயக்குனர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில்வெளியான படம் ‘கூலி’. ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ரஜினி, தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். நாகர்ஜூனாவின் வில்லன் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்று எண்ணம் தொன்றுகிறது.

26
கூலி வசூல்
Image Credit : instagram/ sun pictures

கூலி வசூல்

கூலி பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான "கூலி" திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பல்வேறு ஊடகங்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களின் அறிக்கைகளின்படி, படத்தின் வசூல் குறித்து பல விதமாக தகவல் வெளியானது. அதன்படி 

தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல்:

"கூலி" திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ.28 கோடி முதல் ரூ.45 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் மிக அதிகபட்ச முதல் நாள் வசூல் என்று சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

பல திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகள் பெரும்பாலும் நிரம்பி வழிந்தன.

36
இந்தியா முழுவதும் முதல் நாள் வசூல்:
Image Credit : instagram

இந்தியா முழுவதும் முதல் நாள் வசூல்:

படம் இந்தியா முழுவதும் 65 கோடி முதல் 70 கோடி வரை வசூல் செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வசூலில் தமிழ் பதிப்பு அதிக பங்களிப்பை அளித்துள்ளது. தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி பதிப்புகளும் கணிசமான வரவேற்பைப் பெற்றுள்ளன.

உலகம் முழுவதும் முதல் நாள் வசூல்:

உலகளாவிய அளவில், "கூலி" முதல் நாளில் 150 கோடி முதல் 170 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான "லியோ" படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில், குறிப்பாக வட அமெரிக்காவில், ப்ரீ-சேல்ஸ் மூலம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது.

46
கூலி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
Image Credit : Facebook / sun pictures

கூலி பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இந்த நிலையில் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. அதில், கூறியிருப்பதாவது: ரெக்கார்டு மேக்கர் அண்ட் ரெக்கார்டு பிரேக்கர் என்று குறிப்பிட்டு உலகம் முழுவதும் ரூ.151 கூோடி வசூல் குவித்துள்ளது என்று அறிவித்துள்ளது.

https://x.com/sunpictures/status/1956274750994702492?t=qAoMkW84b75Ds33ZOXLxqA&s=19

56
கூலி படத்தின் கதை: சௌபின் ஷாகிர்
Image Credit : Sun TV/ Youtube

கூலி படத்தின் கதை: சௌபின் ஷாகிர்

துறைமுக மாஃபியாவான நாகர்ஜூனாவுடன் சௌபின் ஷாகிர் பணிபுரிகிறார். காவல்துறை, அவர்களின் சட்டவிரோதச் செயல்களைப் பற்றி விசாரிக்கிறது. சௌபின் ஷாகிர் (தயாளன்), ரஜினியின் (தேவா) நண்பர் ராஜசேகரை (சத்யராஜ்) கொல்கிறார். தேவா, ராஜசேகரின் குடும்பத்தைக் காப்பாற்ற முயல்கிறார். இறுதியில், தேவா வெற்றி பெற்றாரா என்பதே கதை.

66
கூலி விமர்சனம்
Image Credit : Lokesh Kanagaraj/ X

கூலி விமர்சனம்

'கூலி' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. வில்லன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன. லோகேஷ் கனகராஜ், ரஜினியின் இமேஜை மையமாக வைத்து சற்றுத் தடுமாறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கூலி (ரஜினிகாந்த் திரைப்படம்)
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
"பாக்யராஜால் என் வாழ்க்கையே போச்சு!" - நண்பனைச் சீண்டும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.! வைரலாகும் வீடியோ!
Recommended image2
மனைவியை பிரிந்த சோகத்தில் தனுஷ் எழுதிய லவ் பெயிலியர் சாங் பற்றி தெரியுமா?
Recommended image3
சிம்பிளாக நடந்த திருமணம்... பாடகர் வேடனின் மனதை கொள்ளையடித்த அந்த பெண் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved